• Nov 22 2024

ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்ட சட்டம் - கஜேந்திரந்திரகுமார் எம்.பி காட்டம்..!samugammedia

Tharun / Jan 25th 2024, 3:47 pm
image

இந்த சட்டம் தன்னிலையாக சவப்பெட்டியாக, அடிக்கப்பட்ட ஆணியாக அல்லது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாக இருக்கும் என கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரந்திரகுமார் எம்.பி தெரிவித்துள்ளார் 

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது 50 உப பிரிவுகள். இரண்டிலே  ஆற்றுப்படுத்தப்படும்   ஒவ்வொரு சட்டமும்  துறைசார் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். 

மேற்படி அந்த முதல் வாசிப்பின் பின்பு பிரேரணை நிறைவேற்றப்படாது. 

அந்தப் பிரேரணையை முன் மொழியலாம். அது வரையில் குழு அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரையில் அல்லது அந்த காலக்கெடு முடிவடையும் வரையில், பாராளுமன்ற அனுமதி கொடுக்கும் வரையில், எந்த விவாதத்தையும் நடத்தக்கூடாது என்று நிலையியல் கட்டளை குறிப்பிடுகின்றது. என அவர்  தெரிவித்துள்ளார். 

மேலும்,  நேற்று (24) காலை  பாராளுமன்றம் ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி இணைந்து சபாநாயகரை  சந்தித்து இந்த விடயத்தை அவரின் கவனத்துக்கு கொண்டு வந்தது. அது துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டதுதான் என்னுடைய கையில் இருக்கிறது. அது ஏனென்று குறிப்பிடுகின்றது என்றால், அந்த உத்தரவு சார் மேற்பார்வை குழுவின் ஊடகம், இளைஞர் பாரம்பரிய பிரைஜைகள் என பலதரப்பட்ட நிகழ் நிலை பாதுகாப்பு சட்டமூலத்தினை நாங்கள் பாதி செலுத்தியதால் பின்னர் அது தொடர்பான குழுவின் விதப்புரைகள் கிடைத்ததன் பின்புதான், பாராளுமன்ற உறுப்பினர் லலித் குமார அவர்களினால் அந்த குழுவின் தலைவர்கள் அவர்களிடம் சமர்பிக்கப்படவேண்டும். 

23.01.2024 எனும் அந்த அறிக்கை நாங்கள் பரிசீலிக்கப்படுகின்ற அந்த அறிக்கையைத்தான் நான் வாசித்தேன். எங்களுக்கு தெரியாது என்ன திருத்தம் இருக்கும் என்று. உத்தியோக பூர்வமாக அசலாக அந்த சட்டமூலம் தான் எங்களுக்கு இருக்கின்றது. அதில் 36 பிரிவுகள் இருக்கின்றன. 34 பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. துறை சார் மேற்பார்வைக்குழு ஒரு நிபுணர் குழாமின் கருத்துக்களையும் அது பரிசீலித்திருக்கிறது. அந்த அமைச்சர் தாமே நியமித்த நிபுணர் குழாம் திருத்தங்கள் எண்ணிக்கையும் 42 ஆக அதிகரித்திருக்கிறது. 57 பிரிவுகளில் 47 இல் 2 பிரிவுகள் திருத்தப்பட வேண்டும். அந்த திருத்தங்கள் இல்லாமல் இந்த சபை இந்த சட்ட மூலத்தை விவாதிக்குமானால் அது எதையும் அறியாமல் தான் விவாதிக்கிறது. பூரணமான பதிப்புறு திருத்தங்கள் சமர்பிக்கப்படவேண்டும். அது செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக நாங்கள் மிகவும் சர்ச்சைக்குரிய சட்ட மூலத்தை நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். 

ஒரு மூடிய அறைக்குள் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அரசாங்க உறுப்பினர்களும் அதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் . பிரபலமான சிவில் சமூக செயற்பாட்டினரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த கலந்துரையாடல்களிலே மிகவும் மதிக்கப்படுகின்ற தலைவர்கள் அதீத கருத்துக்களை வெளியிடுவதில் கவனமாக இருப்பவர்கள் குறித்த விடயங்களை பற்றி உணர்ச்சி வசப்படாதவர்கள் அந்த சட்டத்துறையிலே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். எது தொடர்பில் என்றால்   ஜனநாயகம் சீர்குலைக்கப்படுகிறது என்ற விடயம் தொடர்பில் அவர்கள் அதிருப்தி தெரிவித்தார்கள். இந்த சட்டம் தன்னிலையாக சவப்பெட்டியாக, அடிக்கப்படும்  ஆணியாக அல்லது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவும்  அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்கப்பட்ட சட்டம் - கஜேந்திரந்திரகுமார் எம்.பி காட்டம்.samugammedia இந்த சட்டம் தன்னிலையாக சவப்பெட்டியாக, அடிக்கப்பட்ட ஆணியாக அல்லது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாக இருக்கும் என கூட்டம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரந்திரகுமார் எம்.பி தெரிவித்துள்ளார் நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளின் பிரகாரம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது 50 உப பிரிவுகள். இரண்டிலே  ஆற்றுப்படுத்தப்படும்   ஒவ்வொரு சட்டமும்  துறைசார் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட வேண்டும். மேற்படி அந்த முதல் வாசிப்பின் பின்பு பிரேரணை நிறைவேற்றப்படாது. அந்தப் பிரேரணையை முன் மொழியலாம். அது வரையில் குழு அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் வரையில் அல்லது அந்த காலக்கெடு முடிவடையும் வரையில், பாராளுமன்ற அனுமதி கொடுக்கும் வரையில், எந்த விவாதத்தையும் நடத்தக்கூடாது என்று நிலையியல் கட்டளை குறிப்பிடுகின்றது. என அவர்  தெரிவித்துள்ளார். மேலும்,  நேற்று (24) காலை  பாராளுமன்றம் ஆரம்பிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சி இணைந்து சபாநாயகரை  சந்தித்து இந்த விடயத்தை அவரின் கவனத்துக்கு கொண்டு வந்தது. அது துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டதுதான் என்னுடைய கையில் இருக்கிறது. அது ஏனென்று குறிப்பிடுகின்றது என்றால், அந்த உத்தரவு சார் மேற்பார்வை குழுவின் ஊடகம், இளைஞர் பாரம்பரிய பிரைஜைகள் என பலதரப்பட்ட நிகழ் நிலை பாதுகாப்பு சட்டமூலத்தினை நாங்கள் பாதி செலுத்தியதால் பின்னர் அது தொடர்பான குழுவின் விதப்புரைகள் கிடைத்ததன் பின்புதான், பாராளுமன்ற உறுப்பினர் லலித் குமார அவர்களினால் அந்த குழுவின் தலைவர்கள் அவர்களிடம் சமர்பிக்கப்படவேண்டும். 23.01.2024 எனும் அந்த அறிக்கை நாங்கள் பரிசீலிக்கப்படுகின்ற அந்த அறிக்கையைத்தான் நான் வாசித்தேன். எங்களுக்கு தெரியாது என்ன திருத்தம் இருக்கும் என்று. உத்தியோக பூர்வமாக அசலாக அந்த சட்டமூலம் தான் எங்களுக்கு இருக்கின்றது. அதில் 36 பிரிவுகள் இருக்கின்றன. 34 பிரிவுகள் திருத்தப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. துறை சார் மேற்பார்வைக்குழு ஒரு நிபுணர் குழாமின் கருத்துக்களையும் அது பரிசீலித்திருக்கிறது. அந்த அமைச்சர் தாமே நியமித்த நிபுணர் குழாம் திருத்தங்கள் எண்ணிக்கையும் 42 ஆக அதிகரித்திருக்கிறது. 57 பிரிவுகளில் 47 இல் 2 பிரிவுகள் திருத்தப்பட வேண்டும். அந்த திருத்தங்கள் இல்லாமல் இந்த சபை இந்த சட்ட மூலத்தை விவாதிக்குமானால் அது எதையும் அறியாமல் தான் விவாதிக்கிறது. பூரணமான பதிப்புறு திருத்தங்கள் சமர்பிக்கப்படவேண்டும். அது செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக நாங்கள் மிகவும் சர்ச்சைக்குரிய சட்ட மூலத்தை நாங்கள் விவாதித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு மூடிய அறைக்குள் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அரசாங்க உறுப்பினர்களும் அதற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள் . பிரபலமான சிவில் சமூக செயற்பாட்டினரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்த கலந்துரையாடல்களிலே மிகவும் மதிக்கப்படுகின்ற தலைவர்கள் அதீத கருத்துக்களை வெளியிடுவதில் கவனமாக இருப்பவர்கள் குறித்த விடயங்களை பற்றி உணர்ச்சி வசப்படாதவர்கள் அந்த சட்டத்துறையிலே குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். எது தொடர்பில் என்றால்   ஜனநாயகம் சீர்குலைக்கப்படுகிறது என்ற விடயம் தொடர்பில் அவர்கள் அதிருப்தி தெரிவித்தார்கள். இந்த சட்டம் தன்னிலையாக சவப்பெட்டியாக, அடிக்கப்படும்  ஆணியாக அல்லது ஜனநாயகத்துக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். எனவும்  அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement