• Nov 26 2024

சுயலாபத்துக்காக போலி தகவல்களை வழங்கும் தலைவர்கள்; மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பேராயர் கோரிக்கை

Chithra / Aug 27th 2024, 9:14 am
image

 

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து அவற்றை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும் தலைவர்களைத் தெரிவு செய்வதனால் பாதிப்பே ஏற்படக்கூடும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

ராகம – பெசிலிக்கா தேவாயலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்

தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தயவுசெய்து விழிப்புடன் செயற்பட வேண்டும்.

அத்துடன் தங்களது சுயலாபத்துக்காக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் மற்றும் போலியான தகவல்களை எமது தலைவர்கள் வழங்கி வருவதாகவும், 

கடந்த 75 வருட காலமாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுடன, தொடர்ந்தும் தங்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று நாட்டின் பெரும்பாலானோர் தமது கொடுப்பனவிற்கேற்ப வாழ்க்கையை முன்கொண்டு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், 

நாட்டு மக்கள் அனைவருக்கும் வளம் பகிர்ந்தளிக்கப்படும் வகையிலான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுயலாபத்துக்காக போலி தகவல்களை வழங்கும் தலைவர்கள்; மக்கள் விழிப்புடன் இருக்குமாறு பேராயர் கோரிக்கை  நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து அவற்றை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கும் தலைவர்களைத் தெரிவு செய்வதனால் பாதிப்பே ஏற்படக்கூடும் என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.ராகம – பெசிலிக்கா தேவாயலத்தில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்தார்தேர்தல் காலங்களில் பொதுமக்கள் தயவுசெய்து விழிப்புடன் செயற்பட வேண்டும்.அத்துடன் தங்களது சுயலாபத்துக்காக பல்வேறுபட்ட உறுதிமொழிகள் மற்றும் போலியான தகவல்களை எமது தலைவர்கள் வழங்கி வருவதாகவும், கடந்த 75 வருட காலமாக இவ்வாறான செயற்பாடுகளிலேயே அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பதுடன, தொடர்ந்தும் தங்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இன்று நாட்டின் பெரும்பாலானோர் தமது கொடுப்பனவிற்கேற்ப வாழ்க்கையை முன்கொண்டு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர், நாட்டு மக்கள் அனைவருக்கும் வளம் பகிர்ந்தளிக்கப்படும் வகையிலான வேலைத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement