• Mar 16 2025

யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது..!

Sharmi / Mar 15th 2025, 11:04 pm
image

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 20 லிட்டர் கசிப்பு ஆறு பறல் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அத்தியூஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது சந்தேகத்தின்பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது. யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று முற்றுகையிடப்பட்டதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதன்போது 20 லிட்டர் கசிப்பு ஆறு பறல் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் அத்தியூஸ் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன் போது சந்தேகத்தின்பேரில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement