எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை ஒத்திவைத்தமையானது, கூட்டு ஊழல் மற்றும் அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் எழுதியுள்ள கடிதத்தில் சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெரும இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த கடிதமானது, ஜனநாயகத்தை கருக்கலைப்பு செய்தமைக்கு விலை கொடுங்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஊழல் குற்றச்சாட்டு என்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளதுடன் அதில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த பொருளாதாரக் கொலையாளிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ரணில் விக்ரமசிங்க வீணடித்த மக்களின் வரிப்பணத்தை மக்களிடம் மீள வழங்குவதன் மூலம் அரசியல் வரலாற்றில் நாகரீகமான, அறம்சார்ந்த அத்தியாயத்தை சேர்ப்பதற்கு போதிய அவகாசம் எஞ்சியிருப்பதாகவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ரணிலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அநுர உட்பட முக்கிய தரப்புகளுக்கு பறந்த கடிதம் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை ஒத்திவைத்தமையானது, கூட்டு ஊழல் மற்றும் அரசியல் கருக்கலைப்பு மற்றும் நிதி ரீதியாக செய்யப்பட்ட பொருளாதாரக் கொலை என சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது.ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கும் எழுதியுள்ள கடிதத்தில் சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெரும இதனை குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் குறித்த கடிதமானது, ஜனநாயகத்தை கருக்கலைப்பு செய்தமைக்கு விலை கொடுங்கள் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் ஊழல் குற்றச்சாட்டு என்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளதுடன் அதில் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.அத்தோடு, தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இந்த பொருளாதாரக் கொலையாளிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், ரணில் விக்ரமசிங்க வீணடித்த மக்களின் வரிப்பணத்தை மக்களிடம் மீள வழங்குவதன் மூலம் அரசியல் வரலாற்றில் நாகரீகமான, அறம்சார்ந்த அத்தியாயத்தை சேர்ப்பதற்கு போதிய அவகாசம் எஞ்சியிருப்பதாகவும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.