ஹோட்டல் ஒன்றுக்குள் பூனையை விரட்டிக்கொண்டு சிறுத்தை பாய்ந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நீலகிரி - கோத்தகிரி தனியார் தேயிலைத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் ஹோட்டலில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த ஹோட்டலில் ஹோட்டல் ஊழியர் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுத்தை ஒன்று பூனையை விரட்டிக் கொண்டு உள்ளே பாய்ந்து சென்றுள்ளது.
சிறுத்தையைக் கண்ட ஊழியர் பூனையை விட வேகமாக தலைதெறிக்க வெளியே தப்பியோடியுள்ளார்.
சிறுத்தை பூனையை விட்டுவிடக்கூடாது என்று மான் வேகத்தில் பூனையைப் பாய்ந்து துரத்திச் சென்றுள்ளது.
காணொளியைப் பார்த்ததும் உயிரைக் கையில் பிடித்தவாறு பூனையும் ஊழியரும் ஓடுவது பதற்றத்தை ஏற்படுத்தியது.
காணொளியைப் பார்த்து பதறிய மக்கள், குறித்த பகுதியில் நடமாடித் திரியும் சிறுத்தையைப் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹோட்டலுக்குள் நுழைந்து பூனையை விரட்டிய சிறுத்தை; தலைதெறிக்க ஓடிய ஊழியர் ஹோட்டல் ஒன்றுக்குள் பூனையை விரட்டிக்கொண்டு சிறுத்தை பாய்ந்து செல்லும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நீலகிரி - கோத்தகிரி தனியார் தேயிலைத் தோட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் ஹோட்டலில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த ஹோட்டலில் ஹோட்டல் ஊழியர் அமர்ந்து தேநீர் குடித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென சிறுத்தை ஒன்று பூனையை விரட்டிக் கொண்டு உள்ளே பாய்ந்து சென்றுள்ளது. சிறுத்தையைக் கண்ட ஊழியர் பூனையை விட வேகமாக தலைதெறிக்க வெளியே தப்பியோடியுள்ளார். சிறுத்தை பூனையை விட்டுவிடக்கூடாது என்று மான் வேகத்தில் பூனையைப் பாய்ந்து துரத்திச் சென்றுள்ளது. பூனையை சிறுத்தை துரத்திச் செல்வதும் சிறுத்தையைக் கண்ட ஊழியர் தலைதெறிக்க ஓடிய காட்சியும் ஹோட்டல் சிசரிவியில் பதிவாகி வெளிவந்துள்ளது. காணொளியைப் பார்த்ததும் உயிரைக் கையில் பிடித்தவாறு பூனையும் ஊழியரும் ஓடுவது பதற்றத்தை ஏற்படுத்தியது. காணொளியைப் பார்த்து பதறிய மக்கள், குறித்த பகுதியில் நடமாடித் திரியும் சிறுத்தையைப் பிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.