ஹட்டன் மேபீல்ட் தோட்டத்தில் தலையில் பலத்த காயங்களுடன் சிறுத்தையின் சடலமொன்று வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டள்ளது.
தேயிலை தோட்டத்தில் சிறுத்தையொன்றின் சடலம் இருப்பதாக, திம்புல பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாகன விபத்து அல்லது தாக்குதலால் இந்த சிறுத்தைக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நல்லதண்ணிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹட்டன் நீதவானின் உத்தரவின் பேரில், உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையின் சடலம் ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
ஹட்டனில் காயமடைந்த நிலையில் இறந்து கிடந்த சிறுத்தை ஹட்டன் மேபீல்ட் தோட்டத்தில் தலையில் பலத்த காயங்களுடன் சிறுத்தையின் சடலமொன்று வனவிலங்கு அதிகாரிகளால் மீட்கப்பட்டள்ளது.தேயிலை தோட்டத்தில் சிறுத்தையொன்றின் சடலம் இருப்பதாக, திம்புல பத்தனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.வாகன விபத்து அல்லது தாக்குதலால் இந்த சிறுத்தைக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என நல்லதண்ணிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஹட்டன் நீதவானின் உத்தரவின் பேரில், உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்காக சிறுத்தையின் சடலம் ரன்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது