• Jan 11 2025

"ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்" கிண்ணியாவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம்..!

Sharmi / Jan 4th 2025, 2:51 pm
image

"ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப் பொருளின் கீழ், டெங்கு நுளம்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்து, பிரதான வீதி ஊடாகச் சென்று திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள சுகாதார ஊழியர் விடுதியை சென்றடைந்தது.

இதன் பின்னர், சுகாதார ஊழியர்கள் விடுதி அமைந்துள்ள வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
 
கிண்ணியா தள வைத்தியசாலை, கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அலுவலகம் ஆகியன இணைந்து, இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்தன.

இந்த, நிகழ்வில் கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம். ஏ. எம். அஜித், கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.எம். அனீஸ், கிண்ணியா வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியச்சகர் ஹஸ்புல்லா ஹில்மி மற்றும் பதில் சட்ட வைத்திய அதிகாரி எம். ஏ. எம். ஜிப்ரி சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.











"ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்" கிண்ணியாவில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பம். "ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்" என்ற தொனிப் பொருளின் கீழ், டெங்கு நுளம்பு சம்பந்தமாக விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்து, பிரதான வீதி ஊடாகச் சென்று திருகோணமலை - மட்டக்களப்பு வீதியில் அமைந்துள்ள சுகாதார ஊழியர் விடுதியை சென்றடைந்தது.இதன் பின்னர், சுகாதார ஊழியர்கள் விடுதி அமைந்துள்ள வளாகத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கிண்ணியா தள வைத்தியசாலை, கிண்ணியா நகர சபை மற்றும் கிண்ணியா சுகாதார வைத்திய அலுவலகம் ஆகியன இணைந்து, இந்த கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுத்தன.இந்த, நிகழ்வில் கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம். ஏ. எம். அஜித், கிண்ணியா நகர சபையின் செயலாளர் எம்.எம். அனீஸ், கிண்ணியா வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியச்சகர் ஹஸ்புல்லா ஹில்மி மற்றும் பதில் சட்ட வைத்திய அதிகாரி எம். ஏ. எம். ஜிப்ரி சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்திய ஊழியர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement