• Jul 03 2024

ஆலயத்தின் புனிதத்தை பாதுகாப்போம்...! திருக்கோணேஸ்வரத்தில் அமைதிப் போராட்டம்...!

Sharmi / Jul 1st 2024, 11:38 am
image

Advertisement

திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரி இன்றையதினம்(01) காலை திருகோணமலை நகர சபைக்கு அண்மையில் உள்ள திருக்கோனேஸ்வர ஆலய பரிபாலன சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர், தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்தனர். 

திருக்கோணேஸ்வர ஆலய அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.

இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.

இப் புனித ஆலய சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் சட்ட ரீதியாக கடையை சீல் வைக்க சென்றவரை தாக்கியதும் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது தென்கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் தெரிவித்தார்.

இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



ஆலயத்தின் புனிதத்தை பாதுகாப்போம். திருக்கோணேஸ்வரத்தில் அமைதிப் போராட்டம். திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரி இன்றையதினம்(01) காலை திருகோணமலை நகர சபைக்கு அண்மையில் உள்ள திருக்கோனேஸ்வர ஆலய பரிபாலன சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தினை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர், தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து இதனை ஏற்பாடு செய்தனர். திருக்கோணேஸ்வர ஆலய அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தப்பட்டது.இப் புனித ஆலய சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் சட்ட ரீதியாக கடையை சீல் வைக்க சென்றவரை தாக்கியதும் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது தென்கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் தெரிவித்தார்.இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement