• Jan 16 2025

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!

Chithra / Jan 15th 2025, 10:08 am
image

 

இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. 

பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. 

பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமத்துடன் 24 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளன. 

அத்துடன் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர். 

ஊடக அடக்குமுறைக்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டம் போன்றன இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.


இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்  இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு கோரி, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமம் உள்ளிட்ட பல சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. பொதுமக்களின் தகவல் அறியும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் பாதுகாப்பு குழுமத்துடன் 24 சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்தக் கடிதத்தை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளன. அத்துடன் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என அவர்கள்  சுட்டிக்காட்டியுள்ளனர். ஊடக அடக்குமுறைக்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டம் போன்றன இரத்து செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement