• Oct 23 2026

காத்திருந்தவர்களுக்குச் செல்லாத கடிதங்கள்! 6 ஆண்டுகளாக நடந்தது என்ன? தபால்காரரின் படுக்கைக்கு அடியில் வெளியான திடுக்கிடும் உண்மை

Chithra / Oct 22nd 2026, 12:06 pm
image


பதுளை - ஹல்துமுல்லை பகுதியில் தபால்காரர் ஒருவரின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸாருக்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.


சொரகுணை தபால் நிலையத்தில் பணியாற்றும் 42 வயதுடைய தபால்காரர் ஒருவர், கடமையின்போது மதுபானம் அருந்தியதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


ஆனால், அந்தக் கடிதங்களுக்குப் பின்னால் இருந்த தகவல்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 2,065 சாதாரண கடிதங்களும் பதிவுத் தபால் கடிதங்களும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.


அவற்றில் நீதிமன்ற அறிவித்தல்கள், அரச நிறுவனங்களின் முக்கிய ஆவணங்கள் மற்றும் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சொரகுணை, ஹல்துமுல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்தக் கடிதங்கள் விநியோகிக்கப்பட வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

காத்திருந்தவர்களுக்குச் செல்லாத கடிதங்கள் 6 ஆண்டுகளாக நடந்தது என்ன தபால்காரரின் படுக்கைக்கு அடியில் வெளியான திடுக்கிடும் உண்மை பதுளை - ஹல்துமுல்லை பகுதியில் தபால்காரர் ஒருவரின் வீட்டைச் சோதனையிட்ட பொலிஸாருக்கு எதிர்பாராத சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.சொரகுணை தபால் நிலையத்தில் பணியாற்றும் 42 வயதுடைய தபால்காரர் ஒருவர், கடமையின்போது மதுபானம் அருந்தியதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, படுக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆனால், அந்தக் கடிதங்களுக்குப் பின்னால் இருந்த தகவல்தான் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2021ஆம் ஆண்டு முதல் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 2,065 சாதாரண கடிதங்களும் பதிவுத் தபால் கடிதங்களும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.அவற்றில் நீதிமன்ற அறிவித்தல்கள், அரச நிறுவனங்களின் முக்கிய ஆவணங்கள் மற்றும் வேலைவாய்ப்பு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களும் அடங்குவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சொரகுணை, ஹல்துமுல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்தக் கடிதங்கள் விநியோகிக்கப்பட வேண்டியிருந்ததாகக் கூறப்படுகிறது.சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஹல்துமுல்லை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement