• Nov 17 2024

சுன்னாகம் பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Chithra / Nov 13th 2024, 12:36 pm
image


சுன்னாகப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது உயிர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தமது உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

 கடந்த வாரம் சுன்னாகப் பொலிசாரால் குடும்பம் ஒன்று வீதியில் வைத்து  அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் தமக்கு குறித்த போலீஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ்சிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பாதிக்கப்பட்ட குடும்பம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணைக்குழு மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார். 

சுன்னாகம் பொலிசாரால் உயிர் அச்சுறுத்தல்; மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு சுன்னாகப் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது உயிர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக தமது உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த வாரம் சுன்னாகப் பொலிசாரால் குடும்பம் ஒன்று வீதியில் வைத்து  அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.இந்நிலையில் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பம் தமக்கு குறித்த போலீஸ் நிலைய உத்தியோகத்தர்களால் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ்சிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது பாதிக்கப்பட்ட குடும்பம் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளதாகவும் முறைப்பாடு தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆணைக்குழு மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement