• Dec 02 2024

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை..!

Sharmi / Oct 1st 2024, 10:29 pm
image

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுளின் சங்க தலைவி தம்பிராசா செல்லவராணி தலைமையில் தம்பிலுவில் மத்திய சந்தை வளாத்தில் வடகிழக்கில்  காணமல் ஆக்கப்பட்ட 1000 மேற்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி  இன்றைய தினம்(01)  மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனையில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி இவ் நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களின் குறித்த சர்வதேச சிறுவர் தினமானது கறுப்பு தினமாக கருதப்படுவதுடன், கடந்த யுத்தகாலத்தில் சரணடைந்த 39 சிறுவர்களின் நிலை என்ன? , அவர்களுக்கு என்ன நடந்தது?  என்று  உண்மை தெரிய வேண்டும் எனவும், உலக அரங்கிலும் சர்வதேசத்திலும் கேட்டு நிற்கின்றோம்.

இனிமேல் இவ் சிறுவர்கள் காணாமல் ஆக்ககூடாது எனவும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கருதி, இவ் சர்வதேச சிறுவர் தினம் கறுப்பு தினமாக இலங்கையில் உள்ள 8 மாவட்டத்தில் உள்ள வலிந்து  காணாமல் உறவுகளின் சங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிறுவர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.








வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை. சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுளின் சங்க தலைவி தம்பிராசா செல்லவராணி தலைமையில் தம்பிலுவில் மத்திய சந்தை வளாத்தில் வடகிழக்கில்  காணமல் ஆக்கப்பட்ட 1000 மேற்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி  இன்றைய தினம்(01)  மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனையில் ஈடுபட்டனர்.அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி இவ் நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களின் குறித்த சர்வதேச சிறுவர் தினமானது கறுப்பு தினமாக கருதப்படுவதுடன், கடந்த யுத்தகாலத்தில் சரணடைந்த 39 சிறுவர்களின் நிலை என்ன , அவர்களுக்கு என்ன நடந்தது  என்று  உண்மை தெரிய வேண்டும் எனவும், உலக அரங்கிலும் சர்வதேசத்திலும் கேட்டு நிற்கின்றோம்.இனிமேல் இவ் சிறுவர்கள் காணாமல் ஆக்ககூடாது எனவும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கருதி, இவ் சர்வதேச சிறுவர் தினம் கறுப்பு தினமாக இலங்கையில் உள்ள 8 மாவட்டத்தில் உள்ள வலிந்து  காணாமல் உறவுகளின் சங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சிறுவர்கள் என பலரும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement