• Oct 16 2026

வடக்கு, கிழக்கில் மின்னல் அபாயம்! எந்த மாவட்டங்களுக்கு ஆபத்து - இன்று இரவு வரை அவதானம்

Chithra / Oct 16th 2026, 2:15 pm
image


நாட்டின் ஐந்து மாகாணங்கள் மற்றும் ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.


இந்த எச்சரிக்கை இன்று (16) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதனால் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், வயல்வெளிகள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகள் போன்ற பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


அத்துடன், மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கம்பி இணைப்புடைய தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மிதிவண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் உள்ளிட்ட திறந்தவெளி வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும், முறிந்து விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.


வடக்கு, கிழக்கில் மின்னல் அபாயம் எந்த மாவட்டங்களுக்கு ஆபத்து - இன்று இரவு வரை அவதானம் நாட்டின் ஐந்து மாகாணங்கள் மற்றும் ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.இந்த எச்சரிக்கை இன்று (16) இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, இடியுடன் கூடிய மழை பெய்யும்போது பாதுகாப்பான கட்டடங்களுக்குள் தங்கியிருக்குமாறும், வயல்வெளிகள் மற்றும் திறந்தவெளி நீர்நிலைகள் போன்ற பகுதிகளில் இருப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன், மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் கம்பி இணைப்புடைய தொலைபேசிகள் மற்றும் மின்சாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள மின்சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.மிதிவண்டிகள், உழவு இயந்திரங்கள் மற்றும் படகுகள் உள்ளிட்ட திறந்தவெளி வாகனங்களில் பயணிப்பதைத் தவிர்க்குமாறும், முறிந்து விழக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அவசர நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement