• Nov 25 2024

" சிறி வாத்தியாரே இனிமேலாவது நேர்மையோடு நடப்பீர்களா..? " - அவதானிப்பு மையம் கேள்வி..!samugammedia

mathuri / Jan 25th 2024, 5:58 am
image

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், தனது வெற்றி உரையில் தன்னுடன் போட்டியிட்ட சுமந்திரனை இணைத்துக் கொண்டு பயணிக்கப் போவதாக சிறிதரன் சூளுரைத்திருப்பது ஒருவேளை அவருக்கு வாக்களித்த தமிழரசுக் கட்சியினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் சிறிதரனை நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ் மக்களுக்கும், தமிழரசுக் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கும் ஏமாற்றத்தையே பரிசாகத் தந்துள்ளது என அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரன் அவர்கள் கடந்த காலங்களிலே அரசியலில் பின்பற்றிய நீதிக்கு புறம்பான சில அணுகுமுறைகளை சுட்டிக்காட்டிய அவதானிப்பு மையம், இனிமேலாவது தமிழ் மக்களின் விடுதலை நோக்கி பயணத்திலே சிறிதரன் அவர்கள் தமிழரசுக் கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியாவது நடக்க இருப்பவை நல்லதாக நடப்பதற்கு வாத்தியாரே இனியாவது நீங்கள் தந்தை செல்வா கட்டிக் காத்த தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி என்ற உணர்வோடு அறத்தின் வழியே துரோகங்களுக்கு இடம் தராமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முதன்மைக் கட்சியாக தமிழரசுக் கட்சியை நீங்கள் வழிநடத்த வேண்டும் எனவும் அனைத்துலக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் உரிமையோடு வலியுறுத்தி நிற்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.


" சிறி வாத்தியாரே இனிமேலாவது நேர்மையோடு நடப்பீர்களா. " - அவதானிப்பு மையம் கேள்வி.samugammedia இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டதையடுத்து அவருக்கு தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.குறித்த அறிக்கையில், தனது வெற்றி உரையில் தன்னுடன் போட்டியிட்ட சுமந்திரனை இணைத்துக் கொண்டு பயணிக்கப் போவதாக சிறிதரன் சூளுரைத்திருப்பது ஒருவேளை அவருக்கு வாக்களித்த தமிழரசுக் கட்சியினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தாலும் சிறிதரனை நாடாளுமன்றம் அனுப்பிய தமிழ் மக்களுக்கும், தமிழரசுக் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்த்த மக்களுக்கும் ஏமாற்றத்தையே பரிசாகத் தந்துள்ளது என அவதானிப்பு மையம் சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிறிதரன் அவர்கள் கடந்த காலங்களிலே அரசியலில் பின்பற்றிய நீதிக்கு புறம்பான சில அணுகுமுறைகளை சுட்டிக்காட்டிய அவதானிப்பு மையம், இனிமேலாவது தமிழ் மக்களின் விடுதலை நோக்கி பயணத்திலே சிறிதரன் அவர்கள் தமிழரசுக் கட்சியை வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும், நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனியாவது நடக்க இருப்பவை நல்லதாக நடப்பதற்கு வாத்தியாரே இனியாவது நீங்கள் தந்தை செல்வா கட்டிக் காத்த தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவி என்ற உணர்வோடு அறத்தின் வழியே துரோகங்களுக்கு இடம் தராமல் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் முதன்மைக் கட்சியாக தமிழரசுக் கட்சியை நீங்கள் வழிநடத்த வேண்டும் எனவும் அனைத்துலக தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் உரிமையோடு வலியுறுத்தி நிற்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement