• Nov 24 2024

இராணுவத்தினரால் பாதிக்கப்படும் வாழ்வாதாரம்; வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கம் ஜனாதிபதியிடம் புகார்!

Anaath / Sep 27th 2024, 7:23 pm
image

இராணுவத்தினர் குறைந்த செலவில் நடாத்துகின்ற அழகங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளன உறுப்பினர்கள்  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர். 

இதன்போது அவர்கள் தொடர்ந்து  தெரிவிக்கையில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினர் அழககங்களை நடாத்துவதனால் தமது  வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தடுத்து நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடமாகாணத்தில் புதிய அழகக சங்கங்களை அமைப்பதற்கு உள்ளூராட்சி திணைக்களம் அனுமதி தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

 புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சனைகளையும் தீர்க்கவேண்டும் புதிதாக பொறுப்பேற்றுள்ள வடமாகாண ஆளுநருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தனர்.

இராணுவத்தினரால் பாதிக்கப்படும் வாழ்வாதாரம்; வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கம் ஜனாதிபதியிடம் புகார் இராணுவத்தினர் குறைந்த செலவில் நடாத்துகின்ற அழகங்களினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக தடுத்து நிறுத்துமாறு வடமாகாண அழகக கூட்டுறவுச்சங்கங்களின் சம்மேளன உறுப்பினர்கள்  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தனர். இதன்போது அவர்கள் தொடர்ந்து  தெரிவிக்கையில் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இராணுவத்தினர் அழககங்களை நடாத்துவதனால் தமது  வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தடுத்து நிறுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வடமாகாணத்தில் புதிய அழகக சங்கங்களை அமைப்பதற்கு உள்ளூராட்சி திணைக்களம் அனுமதி தரவேண்டும் எனவும் தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சனைகளையும் தீர்க்கவேண்டும் புதிதாக பொறுப்பேற்றுள்ள வடமாகாண ஆளுநருக்கும் எமது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement