• Jun 09 2026

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

Ziya / Jun 9th 2026, 12:24 pm
image

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) தொடர்ச்சியாக பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, நேற்று (08) கந்தளாய் பிரதேச செயலகத்தில் வைத்து 20 வீட்டுத்தோட்டப் பயனாளிகளுக்கும் 10 நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.


அந்த வகையில், வீட்டுத்தோட்டப் பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட உபகரணங்களும், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக தலா 20000.00  பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.


மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கந்தளாய் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச  செயலாளர், உதவி பிரதேச செயலாளர், AHRC நிறுவனத்தின் பணிப்பாளர்  கண்டுமணி லவகுசராசா, பிரதி பணிப்பாளர் திரு. அழகுராசன் மதன் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்பிற்கும் சமூகத்தின் நிலையான முன்னேற்றத்திற்கும் AHRC தனது பங்களி ப்பினையாற்றி வருவது குறிப்பிடத்தக்கத்தாகும்


டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில், அகம் மனிதாபிமான வள நிலையம் (AHRC) தொடர்ச்சியாக பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, நேற்று (08) கந்தளாய் பிரதேச செயலகத்தில் வைத்து 20 வீட்டுத்தோட்டப் பயனாளிகளுக்கும் 10 நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களுக்கும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.அந்த வகையில், வீட்டுத்தோட்டப் பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட உபகரணங்களும், நன்னீர் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக தலா 20000.00  பெறுமதியான காசோலைகளும் வழங்கப்பட்டன.மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு கந்தளாய் பிரதேச செயலாளர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச  செயலாளர், உதவி பிரதேச செயலாளர், AHRC நிறுவனத்தின் பணிப்பாளர்  கண்டுமணி லவகுசராசா, பிரதி பணிப்பாளர் திரு. அழகுராசன் மதன் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்பிற்கும் சமூகத்தின் நிலையான முன்னேற்றத்திற்கும் AHRC தனது பங்களி ப்பினையாற்றி வருவது குறிப்பிடத்தக்கத்தாகும்

Advertisement

Advertisement

Advertisement