• Nov 23 2024

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க பணத்தை கொட்டும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் - வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி

Chithra / Nov 8th 2024, 4:31 pm
image


வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக  அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் (8)  மதியம் மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த பாராளுமன்ற தேர்தலில் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. அந்த சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதாகும் என்பதை கடந்த சில நாட்களாக நான் அறிந்து கொண்டேன்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சக்திகள்  நிறைய பணத்தை கொட்டியுள்ளார்கள்.

அந்த அடிப்படையில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளராகிய நான்  தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக செயல்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு  தெரிவிக்கிறேன்.

தான் போட்டியிட இருந்த சுயேட்சை குழு மாற்றத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் மாவீரர்களுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கும் பொய்யான வாக்குறுதியை வழங்கியதை நான் இனம் கண்டு கொண்டமையினால் அவர்களுக்கு என்னால் எந்த துரோகமும் இழைக்கப் படக்கூடாது என்பதற்காகவே நான் இந்த சுயேட்சை குழுவில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் சுயேட்சையாக போட்டியிடும் கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்காது சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்க பணத்தை கொட்டும் உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் - வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி வன்னி தேர்தல் தொகுதியில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் கட்சியின் முதன்மை வேட்பாளர் சிறிபாலன் ஜென்சி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக  அறிவித்துள்ளார்.இன்றைய தினம் (8)  மதியம் மன்னார் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் .அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த பாராளுமன்ற தேர்தலில் பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றன. அந்த சுயேட்சை குழுக்களின் நோக்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதாகும் என்பதை கடந்த சில நாட்களாக நான் அறிந்து கொண்டேன்.இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருக்கும் சக்திகள்  நிறைய பணத்தை கொட்டியுள்ளார்கள்.அந்த அடிப்படையில் சுயேட்சை குழு 4 இலாம்பு சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளராகிய நான்  தமிழ் மக்களின் பிரதி நிதிகளாக செயல்படும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு  தெரிவிக்கிறேன்.தான் போட்டியிட இருந்த சுயேட்சை குழு மாற்றத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் மாவீரர்களுக்கும், மாவீரர் குடும்பங்களுக்கும் மாற்றாற்றல் உள்ளவர்களுக்கும் பொய்யான வாக்குறுதியை வழங்கியதை நான் இனம் கண்டு கொண்டமையினால் அவர்களுக்கு என்னால் எந்த துரோகமும் இழைக்கப் படக்கூடாது என்பதற்காகவே நான் இந்த சுயேட்சை குழுவில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும் சுயேட்சையாக போட்டியிடும் கட்சிகள் தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடித்து தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்காது சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என கோரிக்கையும் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement