• May 13 2024

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - கூட்டமைப்பின் 3 கட்சிகள் மட்டுமே இணைந்து போட்டியிட தீர்மானம்! சிவஞானம் அறிவிப்பு

TNA
Chithra / Dec 31st 2022, 8:53 pm
image

Advertisement

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 கட்சிகள் மட்டுமே இணைந்து போட்டியிடுவதான தீர்மானம் தமிழரசுக் கட்சியின் அரசியல்க் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை உண்மைதான் என தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்று வந்தால் தமிழரசுக் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுவதா என்ற விடயம் ஆராயப்பட்டபோதே இந்த விடயமும் தீர்மானமாக கூறப்பட்டது. 

அதாவது தமிழ் அரசுக் கட்சி மட்டும் அல்ல தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளுடன் மட்டும் கூட்டிணைந்து போட்டியிடுவதாகவே தீர்மானிக்கப்பட்டது. 

சூம்வழியில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் தலைவர் மாவை சேனாதிராயா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.சாணக்கியன் மற்றும் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், கொழும்புக் கிளைத் தலைவர் கே.வி.தவராசா, திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர் எஸ்.குகதாசன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகிய  ஒன்பது பேர் பங்குகொண்ட கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. 

இவ்வாறு தீர்மானிக்கப்படவில்லை என்ற ஒரு கருத்து இன்று முன்வைக்கப்பட்டதனால் இக் கருத்தை பகிரங்கமாக கூறும் நிலை ஏற்படுகின்றது.

இதன் காரணமாகவே  இக் கருத்தை பொது வெளியில் கூற முன்பு கட்சியின் பதில் செயலாளர் மற்றும் நிர்வாகச் செயலாளர் ஆகியோருடன் இதனை கூறுவதற்கான ஒப்புதலையும்  பெற்றேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். - என  தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - கூட்டமைப்பின் 3 கட்சிகள் மட்டுமே இணைந்து போட்டியிட தீர்மானம் சிவஞானம் அறிவிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 கட்சிகள் மட்டுமே இணைந்து போட்டியிடுவதான தீர்மானம் தமிழரசுக் கட்சியின் அரசியல்க் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டமை உண்மைதான் என தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட துணைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒன்று வந்தால் தமிழரசுக் கட்சி மட்டும் தனித்து போட்டியிடுவதா என்ற விடயம் ஆராயப்பட்டபோதே இந்த விடயமும் தீர்மானமாக கூறப்பட்டது. அதாவது தமிழ் அரசுக் கட்சி மட்டும் அல்ல தமிழ் அரசுக் கட்சி உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 3 கட்சிகளுடன் மட்டும் கூட்டிணைந்து போட்டியிடுவதாகவே தீர்மானிக்கப்பட்டது. சூம்வழியில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் தலைவர் மாவை சேனாதிராயா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், இ.சாணக்கியன் மற்றும் கட்சியின் பதில் செயலாளர் ப.சத்தியலிங்கம், கொழும்புக் கிளைத் தலைவர் கே.வி.தவராசா, திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர் எஸ்.குகதாசன், கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் ஆகிய  ஒன்பது பேர் பங்குகொண்ட கூட்டத்திலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு தீர்மானிக்கப்படவில்லை என்ற ஒரு கருத்து இன்று முன்வைக்கப்பட்டதனால் இக் கருத்தை பகிரங்கமாக கூறும் நிலை ஏற்படுகின்றது.இதன் காரணமாகவே  இக் கருத்தை பொது வெளியில் கூற முன்பு கட்சியின் பதில் செயலாளர் மற்றும் நிர்வாகச் செயலாளர் ஆகியோருடன் இதனை கூறுவதற்கான ஒப்புதலையும்  பெற்றேன் என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். - என  தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement