• Nov 22 2024

விளக்கமறியலில் வைக்கப்பட்ட லொஹான் வைத்தியசாலையில் அனுமதி! மனைவிக்கும் பிடியாணை

Chithra / Nov 2nd 2024, 8:47 am
image

 

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத மகிழுந்து ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.

கண்டி – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, நுகேகொடை – கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.

இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, சொகுசு காரை உதிரிபாகங்களாக  சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கைது செய்யப்படவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவரை கைது செய்வதற்கு  இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஷி பாபா ரத்வத்தவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், முன்னாள் அரச அமைச்சரின் மகனிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.



விளக்கமறியலில் வைக்கப்பட்ட லொஹான் வைத்தியசாலையில் அனுமதி மனைவிக்கும் பிடியாணை  விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.திடீர் சுகவீனம் காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத மகிழுந்து ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.கண்டி – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, நுகேகொடை – கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.அவரை எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டார்.இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் திடீர் சுகவீனம் காரணமாக அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, சொகுசு காரை உதிரிபாகங்களாக  சேகரித்து மறைத்து வைத்த குற்றத்திற்காக லொஹான் ரத்வத்தேவின் மனைவியும் கைது செய்யப்படவுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.அவரை கைது செய்வதற்கு  இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ராஷி பாபா ரத்வத்தவுக்கு நுகேகொட நீதவான் நீதிமன்றம் பிடியாணை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.மேலும், முன்னாள் அரச அமைச்சரின் மகனிடமும் விசாரணை நடத்தப்படும் எனவும் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement