• Dec 14 2024

லொறியும் பேருந்தும் மோதி கோர விபத்து! 8 பேர் வைத்தியசாலையில்!

Chithra / Aug 2nd 2024, 11:14 am
image



நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (02)  காலை இடம்பெற்றுள்ளது. 

லொறி ஒன்றும் சொகுசு பஸ் ஒன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த லொறியுடன் நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கொகுசு பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லொறியும் பேருந்தும் மோதி கோர விபத்து 8 பேர் வைத்தியசாலையில் நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியில் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாமஸ்டன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.குறித்த விபத்து இன்று (02)  காலை இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்றும் சொகுசு பஸ் ஒன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலவாக்கலை பகுதியில் இருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த லொறியுடன் நுவரெலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த கொகுசு பஸ் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement