புத்தளம் நகரில் நேற்று முன்தினம் இரவு (18) இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் புத்தளம் தலைமையக பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் பிரதேச போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 18ஆம் திகதி அதிகாலை பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றினை வழிமறித்து அந்த லொறியையும் அதன் சாரதியையும் கொள்ளையர்கள் குறித்த பொலிஸாருடன், இணைந்து கடத்தி சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
வேனில் வந்த கொள்ளையர்கள் சிலர் முதலில் பீடி இலைகளை கொண்டு வந்த லொறியின் சாரதியை கடத்திச் சென்று தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்து சாரதியை நிந்தனி பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
அதன் பின்னர் குறித்த லொறியை போக்குவரத்து பொலிஸார் இருவரின் உதவியில், கடத்திச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடத்தப்பட்ட குறித்த லொறியில் 84 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 2500 கிலோ கிராம் பீடி இலைகள் காணப்பட்டதாகவும் அதன் பெறுமதி இரண்டு கோடி ரூபா எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்தோடு பொலிஸ் பாதுகாப்பில் கடத்திச் செல்லப்பட்ட குறித்த லொறியில் இருந்த பீடி இலைகள், வேறு லொறி ஒன்றிற்கு மாற்றப்பட்ட பின்னர் கடத்தப்பட்ட லொறி புத்தளம் - கொட்டுக்கச்சிய பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறி கடத்தப்பட்ட இடத்திற்கு புத்தளம் பிரிவு போக்குவரத்து பொலிஸார் , பொலிஸ் சீருடையில் வந்தது அந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் கொள்ளையர்கள் கடத்திச் சென்ற சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புத்தளம் தலைமையக குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் ஆலோசனைக்கு அமைய, புத்தளம் தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.பி.என்.குலதூங்கவின் மேற்பார்வையில் புத்தளம் தலைமையக பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.எச்.எம்.ஹேரத் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புத்தளத்தில் பீடி இலைகளை கொண்டு சென்ற லொறி கடத்தல்.பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது. புத்தளம் நகரில் நேற்று முன்தினம் இரவு (18) இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் உட்பட மூவர் புத்தளம் தலைமையக பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.புத்தளம் பிரதேச போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 18ஆம் திகதி அதிகாலை பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றினை வழிமறித்து அந்த லொறியையும் அதன் சாரதியையும் கொள்ளையர்கள் குறித்த பொலிஸாருடன், இணைந்து கடத்தி சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.வேனில் வந்த கொள்ளையர்கள் சிலர் முதலில் பீடி இலைகளை கொண்டு வந்த லொறியின் சாரதியை கடத்திச் சென்று தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் கைத்தொலைபேசிகளை கொள்ளையடித்து சாரதியை நிந்தனி பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஅதன் பின்னர் குறித்த லொறியை போக்குவரத்து பொலிஸார் இருவரின் உதவியில், கடத்திச் சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.கடத்தப்பட்ட குறித்த லொறியில் 84 உரமூடைகளில் அடைக்கப்பட்ட 2500 கிலோ கிராம் பீடி இலைகள் காணப்பட்டதாகவும் அதன் பெறுமதி இரண்டு கோடி ரூபா எனவும் கண்டறியப்பட்டுள்ளது.அத்தோடு பொலிஸ் பாதுகாப்பில் கடத்திச் செல்லப்பட்ட குறித்த லொறியில் இருந்த பீடி இலைகள், வேறு லொறி ஒன்றிற்கு மாற்றப்பட்ட பின்னர் கடத்தப்பட்ட லொறி புத்தளம் - கொட்டுக்கச்சிய பகுதியில் கைவிட்டுச் சென்றுள்ளனர் என பொலிஸார் குறிப்பிட்டனர்.பீடி இலைகளை ஏற்றிச் சென்ற லொறி கடத்தப்பட்ட இடத்திற்கு புத்தளம் பிரிவு போக்குவரத்து பொலிஸார் , பொலிஸ் சீருடையில் வந்தது அந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.எவ்வாறாயினும், போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் கொள்ளையர்கள் கடத்திச் சென்ற சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் தொடர்பில் ஏற்கனவே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் புத்தளம் தலைமையக குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த பீடி இலைகள் இந்தியாவில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் ஆலோசனைக்கு அமைய, புத்தளம் தலைமையக பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.பி.என்.குலதூங்கவின் மேற்பார்வையில் புத்தளம் தலைமையக பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.எச்.எம்.ஹேரத் தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.