• Apr 14 2026

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு!

shanu / Mar 17th 2026, 10:55 am
image

ஆசிய சந்தையில் இன்று (17) முற்பகல் நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை 2.8% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 103.08 டொலராக பதிவாகியுள்ளது. 


அதேபோல், அமெரிக்க மசகு எண்ணெயின் விலையும் சுமார் 3% இனால் அதிகரித்து 96.25 டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. 


ஹோர்முஸ் நீரிணை ஊடாக சில கப்பல்கள் பாதுகாப்பாக பயணித்ததாக வெளியான தகவல்களை அடுத்து, நேற்று (16) எண்ணெய் விலை சற்று வீழ்ச்சியடைந்திருந்தது. 


இதேவேளை, தமது எரிசக்தித் தேவைகளுக்காக வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெயை நம்பியிருக்கும் ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (17) சற்று உயர்வான பெறுமதியுடன் ஆரம்பமாகின.

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு ஆசிய சந்தையில் இன்று (17) முற்பகல் நிலவரப்படி, பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெயின் விலை 2.8% இனால் அதிகரித்து, ஒரு பீப்பாய் 103.08 டொலராக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க மசகு எண்ணெயின் விலையும் சுமார் 3% இனால் அதிகரித்து 96.25 டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணை ஊடாக சில கப்பல்கள் பாதுகாப்பாக பயணித்ததாக வெளியான தகவல்களை அடுத்து, நேற்று (16) எண்ணெய் விலை சற்று வீழ்ச்சியடைந்திருந்தது. இதேவேளை, தமது எரிசக்தித் தேவைகளுக்காக வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெயை நம்பியிருக்கும் ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (17) சற்று உயர்வான பெறுமதியுடன் ஆரம்பமாகின.

Advertisement

Advertisement

Advertisement