• Jan 11 2025

சொகுசுப் பேருந்துகள் விமான நிலையத்திற்குச் செல்ல அனுமதி

Chithra / Jan 10th 2025, 11:01 am
image

 

பாதை இலக்கம் 187 இன் கீழ் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்படும் முனையத்தை வந்தடைய விமான நிலையமும் விமான நிறுவனமும் அனுமதித்துள்ளன.

பயணிகளின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் கோட்டை – கட்டுநாயக்க பஸ்கள் ஏறக்குறைய 6 வருடங்களின் பின்னர் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த பேருந்துகள் விமான நிலையத்திற்குள் தங்கி இந்த பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை.

2019 ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் சேவை இது வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


சொகுசுப் பேருந்துகள் விமான நிலையத்திற்குச் செல்ல அனுமதி  பாதை இலக்கம் 187 இன் கீழ் இயங்கும் கோட்டை – கட்டுநாயக்க சொகுசு பேருந்துகள் இன்று (10) முதல் விமான நிலைய புறப்படும் முனையத்தை வந்தடைய விமான நிலையமும் விமான நிறுவனமும் அனுமதித்துள்ளன.பயணிகளின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனால் கோட்டை – கட்டுநாயக்க பஸ்கள் ஏறக்குறைய 6 வருடங்களின் பின்னர் விமான நிலைய புறப்பாடு முனையத்திற்கு வருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த பேருந்துகள் விமான நிலையத்திற்குள் தங்கி இந்த பேருந்து சேவையை இயக்க வாய்ப்பு இல்லை.2019 ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் சேவை இது வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement