திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ், குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் 38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா - கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி சென்ற சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த பத்து வருடங்களாக இடம் பெற்று வந்த நிலையில் நேற்று திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.
மதரஸாவுக்கு சென்ற மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும், 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனை பணத்தில் இருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதரஸா மாணவன் துஷ்பிரயோகம்; பத்து வருடங்களுக்கு பின் சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட தண்டனை திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் எட்டு வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லாஹ், குற்றவாளிக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.கிண்ணியா கட்டையாறு மதரஸா வீதியில் வசித்து வரும் 38 வயதான ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிண்ணியா - கட்டையாறு பகுதியில் மதரஸாவுக்கு 2015 ஆம் ஆண்டு மே 30 ஆம் திகதி சென்ற சிறுவனை பலவந்தமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸாரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த பத்து வருடங்களாக இடம் பெற்று வந்த நிலையில் நேற்று திறந்த நீதிமன்றில் தீர்ப்பு வாசிக்கப்பட்டது. மதரஸாவுக்கு சென்ற மாணவனை பலாத்காரமாக இழுத்துச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து குறித்த நபருக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்குமாறும், 1,500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அந்த தண்ட பணத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாத சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் நீதிபதி, தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பத்தாயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறும் அதை கட்டத் தவறினால், மேலும் ஆறு மாத கால சிறை தண்டனை வழங்குமாறும் பாதிக்கப்பட்டோர் நிதியத்திற்கு தண்டனை பணத்தில் இருந்து 20 வீதம் செலுத்த வேண்டும் எனவும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.