அம்பாறை - மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ். முஸ்அப் என்ற கல்வி கற்று வந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மத்ரஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை, சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் குறித்த மத்ரஸாவில் இருந்த சிசிரிடி வன்பொருள் மாயமான நிலையில் பொலிஸாரின் விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் சிசிரிவி தொழிநுட்பவியலாளர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்,
மௌலவி அடிக்கடி தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு, அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிரிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் சிசிரிவி தொழிநுட்பவியலாளரான எனக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து எல்லாவற்றையும் வன்பொருளில் இருந்து அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதற்கு நான் என்னால் வரமுடியாது என மௌலவியிடம் கூறி விட்டேன். அத்துடன் வன்பொருளில் உள்ளவற்றை ஏன் அழிக்க வேண்டும் என கேட்டதற்கு அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
இரவு 11 மணியளவில் மாணவன் இறந்த பின்னர் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
அந்த வேளை எனது சகோதரர் நாம் சிசிரிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.
நான் அங்கு என்ன செய்தீர்கள் என சகோதரரை கேட்டேன். அப்பாடசாலையில் சிசிரிவி வன்பொருள் காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதுடன் வன்பொருளை அங்கிருந்து அகற்றி செல்லுமாறு பதற்றத்துடன் கூறியுள்ளார்.
அத்துடன் 1000 ரூபா காசும் கொடுத்து 3 நாளைக்கு பின்னர் வன்பொருளை வந்து பொருத்தி தருமாறும் எனது சகோதரரிடம் மௌலவி கூறி இருக்கிறார்.
அத்துடன் சம்பவம் இடம்பெற்று பதற்றம் நீடித்து இருக்கின்ற நிலையில், மௌலவி அடிக்கடி தொலைபேசி அழைப்பு எடுத்து அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என தெரிவித்தார்.
மத்ரஸா மாணவனின் மரணம்: அழித்த சிசிரிவி காணொளியை மீண்டும் எடுக்க முடியுமா என கேட்ட மௌலவி - தொழிநுட்பவியலாளரின் அதிர்ச்சி வாக்குமூலம் அம்பாறை - மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸா ஒன்றில் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ். முஸ்அப் என்ற கல்வி கற்று வந்த மாணவன் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மத்ரஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகிய வேளை, சாய்ந்தமருது பொலிஸாரால் மதரஸா நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டார்.இந்நிலையில் குறித்த மத்ரஸாவில் இருந்த சிசிரிடி வன்பொருள் மாயமான நிலையில் பொலிஸாரின் விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.இதுதொடர்பில் சிசிரிவி தொழிநுட்பவியலாளர் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில்,மௌலவி அடிக்கடி தொலைப்பேசி அழைப்பினை மேற்கொண்டு, அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என சிசிரிவி தொழிநுட்பவியலாளர் தெரிவித்துள்ளார்.சம்பவ தினமன்று இரவு 7 மணியளவில் மௌலவி பதற்றத்துடன் சிசிரிவி தொழிநுட்பவியலாளரான எனக்கு தொலைபேசி ஊடாக அழைப்பு எடுத்து உடனடியாக மத்ரஸாவிற்கு வந்து எல்லாவற்றையும் வன்பொருளில் இருந்து அழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அதற்கு நான் என்னால் வரமுடியாது என மௌலவியிடம் கூறி விட்டேன். அத்துடன் வன்பொருளில் உள்ளவற்றை ஏன் அழிக்க வேண்டும் என கேட்டதற்கு அவர் ஒன்றுமே சொல்லவில்லை.பின்னர் எனது சகோதரரின் தொலைபேசி இலக்கத்தை அனுப்பி அவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன். இரவு 11 மணியளவில் மாணவன் இறந்த பின்னர் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது. அந்த வேளை எனது சகோதரர் நாம் சிசிரிவி பரிசோதனை மேற்கொண்ட மத்ரஸாவில் மாணவன் மரணமாகியுள்ளதாக என்னிடம் குறிப்பிட்டார்.நான் அங்கு என்ன செய்தீர்கள் என சகோதரரை கேட்டேன். அப்பாடசாலையில் சிசிரிவி வன்பொருள் காணொளிகளை அழிக்குமாறு மௌலவி கேட்டதுடன் வன்பொருளை அங்கிருந்து அகற்றி செல்லுமாறு பதற்றத்துடன் கூறியுள்ளார். அத்துடன் 1000 ரூபா காசும் கொடுத்து 3 நாளைக்கு பின்னர் வன்பொருளை வந்து பொருத்தி தருமாறும் எனது சகோதரரிடம் மௌலவி கூறி இருக்கிறார்.அத்துடன் சம்பவம் இடம்பெற்று பதற்றம் நீடித்து இருக்கின்ற நிலையில், மௌலவி அடிக்கடி தொலைபேசி அழைப்பு எடுத்து அழித்த சிசிரிவி காணொளிகளை மீண்டும் எடுக்க முடியுமா என கேள்வி கேட்ட வண்ணம் இருந்தார் என தெரிவித்தார்.