• May 07 2024

ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள்..! - உறுப்பினர்கள் விளக்கம்..!

Chithra / Dec 13th 2023, 12:40 pm
image

Advertisement

  

அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப்  புறம்பானவை என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்  நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் செயலாளர் மற்றும் உப செயலாளர் ஆகியோர்  கருத்துத் தெரிவிக்கையில்,

அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் தொடர்பில் முன்னுக்கு பின் முரண்பாடான செய்திகள் கல்முனை தமிழரசு கட்சி தொகுதி குறித்து வெளியாகி வருகின்றன.

எமது கிளைக்குள் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை. அத்துடன் கட்சி கட்டமைப்பு அதன் வளர்ச்சி தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பல தீர்மானங்களை எடுத்திருந்தோம்.

ஆனால் தற்போது சூடு பிடித்துள்ள கட்சி தலைமை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம், - இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள். - உறுப்பினர்கள் விளக்கம்.   அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப்  புறம்பானவை என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில்  நேற்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.இது குறித்து கல்முனை தமிழரசுக்கட்சி தொகுதிக்கிளையின் தலைவர் நிதான்சன் செயலாளர் மற்றும் உப செயலாளர் ஆகியோர்  கருத்துத் தெரிவிக்கையில்,அண்மையில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டம் தொடர்பில் முன்னுக்கு பின் முரண்பாடான செய்திகள் கல்முனை தமிழரசு கட்சி தொகுதி குறித்து வெளியாகி வருகின்றன.எமது கிளைக்குள் எந்தவொரு முரண்பாடுகளும் இல்லை. அத்துடன் கட்சி கட்டமைப்பு அதன் வளர்ச்சி தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தில் பல தீர்மானங்களை எடுத்திருந்தோம்.ஆனால் தற்போது சூடு பிடித்துள்ள கட்சி தலைமை குறித்து இக்கூட்டத்தில் ஆராயப்பட்டவில்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம், - இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement