• Nov 22 2024

மதுரை ஆதீனத்தின் கோரிக்கையை வரவேற்கிறோம் - அடாவடி அரசினால் அதனை தடுக்க முடியாது - சிவாஜிலிங்கம்...!

Anaath / Jun 12th 2024, 10:16 am
image

சிங்கள, பௌத்த தலைமைகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருப்பதற்கான பதிலடி இறுதியிலே தமிழீழம் இனப்பிரச்சினைதான் என்றால் அதை எவராலும் தடுக்க முடியாது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 

யாழில் நேற்று (11) இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தமிழர்களுக்கு தனிநாடு அமைத்துக் கொடுக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்தினை மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள கருத்தானது உண்மையிலே நல்ல கருத்து.  ஏனென்றால் நாங்கள் இலங்கைக்குள் ஒரு தீர்வினை எதிர்பார்க்க முடியாது என்றால், ஆதீனம் அதை வலியுறுத் தட்டும், இந்தியாவிற்கும் பூகோள நலன்சார்ந்த அரசியலில் ஒரு தேவை வருகிறது என்றால் இந்தியா உள் ளிட்ட 4 நாடுகள் நேர்ந்த குவாட் அமைப்பு, அதாவது அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட 4 நாடுகள் சேர்ந்து பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்தினால், அந்த வாக்கெடுப்பு எங்கே சென்று முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களும் அந்தந்த நாடுகளில் இதற்கு வாக்களித்தால், அந்த தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதும் சகலருக்கும் தெரியும். ஆகவே இன்று இலங்கையின் சிங்கள, பௌத்த தலைமைகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டி ருப்பதற்கான பதிலடி இறுதியிலே தமி ழீழம்தான் என்றால் அதை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


மதுரை ஆதீனத்தின் கோரிக்கையை வரவேற்கிறோம் - அடாவடி அரசினால் அதனை தடுக்க முடியாது - சிவாஜிலிங்கம். சிங்கள, பௌத்த தலைமைகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டிருப்பதற்கான பதிலடி இறுதியிலே தமிழீழம் இனப்பிரச்சினைதான் என்றால் அதை எவராலும் தடுக்க முடியாது என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (11) இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு தனிநாடு அமைத்துக் கொடுக்கப்பட்ட வேண்டும் என்ற கருத்தினை மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள கருத்தானது உண்மையிலே நல்ல கருத்து.  ஏனென்றால் நாங்கள் இலங்கைக்குள் ஒரு தீர்வினை எதிர்பார்க்க முடியாது என்றால், ஆதீனம் அதை வலியுறுத் தட்டும், இந்தியாவிற்கும் பூகோள நலன்சார்ந்த அரசியலில் ஒரு தேவை வருகிறது என்றால் இந்தியா உள் ளிட்ட 4 நாடுகள் நேர்ந்த குவாட் அமைப்பு, அதாவது அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா உட்பட 4 நாடுகள் சேர்ந்து பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்தினால், அந்த வாக்கெடுப்பு எங்கே சென்று முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்த வாக்கெடுப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களும் அந்தந்த நாடுகளில் இதற்கு வாக்களித்தால், அந்த தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதும் சகலருக்கும் தெரியும். ஆகவே இன்று இலங்கையின் சிங்கள, பௌத்த தலைமைகள் வெறியாட்டம் ஆடிக்கொண்டி ருப்பதற்கான பதிலடி இறுதியிலே தமி ழீழம்தான் என்றால் அதை எவராலும் தடுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement