• May 17 2024

மதிப்புமிக்க உதவிகளைத் தொடர்ந்து வழங்கிய சீனாவிற்கு நன்றி தெரிவித்த மஹிந்த! samugammedia

Tamil nila / Apr 8th 2023, 7:40 pm
image

Advertisement

இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ் – சிங்கள சித்தரைப் புத்தாண்டு வாழ்த்து சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான பாரம்பரிய நட்பை வலுப்படுத்தல் மற்றும் பல்வேறு துறைசார் பரிமாற்றங்கள் குறித்து சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத செயற்பாடுகள், போருக்குப் பின்னரான மறுசீரமைப்பு, கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் போன்ற அனைத்து முக்கியமான தருணங்களிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் இலங்கைக்கு மிகவும் மதிப்புமிக்க உதவிகளைத் தொடர்ந்து வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது நன்றி தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பை ஆழமாக்குதல், பல்வேறு துறைகளில் பரிமாற்றங்கள், ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொதுவான நலன்கள் தொடர்பான மற்ற விஷயங்கள் குறித்து பரந்தளவில் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.


மதிப்புமிக்க உதவிகளைத் தொடர்ந்து வழங்கிய சீனாவிற்கு நன்றி தெரிவித்த மஹிந்த samugammedia இலங்கைக்கான சீனத்தூதுவர் கீ சென் ஹொங் மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.தமிழ் – சிங்கள சித்தரைப் புத்தாண்டு வாழ்த்து சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.சீனா மற்றும் இலங்கைக்கிடையிலான பாரம்பரிய நட்பை வலுப்படுத்தல் மற்றும் பல்வேறு துறைசார் பரிமாற்றங்கள் குறித்து சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 3 ஆண்டுகளில் பயங்கரவாத செயற்பாடுகள், போருக்குப் பின்னரான மறுசீரமைப்பு, கொவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான போராட்டம் போன்ற அனைத்து முக்கியமான தருணங்களிலும், தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் இலங்கைக்கு மிகவும் மதிப்புமிக்க உதவிகளைத் தொடர்ந்து வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன் போது நன்றி தெரிவித்துள்ளார்.அத்தோடு இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பை ஆழமாக்குதல், பல்வேறு துறைகளில் பரிமாற்றங்கள், ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் பொதுவான நலன்கள் தொடர்பான மற்ற விஷயங்கள் குறித்து பரந்தளவில் கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement