• Nov 25 2024

மஹிந்த தரப்பினருக்கு கனடாவில் வலுக்கும் எதிர்ப்பு - சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த திட்டம்..!

Chithra / Dec 18th 2023, 2:11 pm
image


கனடாவில் கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் மஹிந்த தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார்.

கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில், 

''கனடாவில் கென்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள்'' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாங்க உறுப்பினர்களிற்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை விதிப்பதே தற்போது என்னுடைய திட்டம், 

இதன் மூலம் சர்வதேச தடைகளை விதிப்பதன்  ஊடாக அவர்களது தனிப்பட்ட நிதிகளை முடக்க முடியும்.

இதேவேளை சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம்.

இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களை இனங்கண்டு சட்டநடவடிக்கைகளிற்கு உட்படுத்தலாம்.

அத்துடன் தமிழர்களிற்கு எதிராக தொடரும் இனப்படுகொலை நடவடிக்கைகளிற்காக இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து கண்டிப்போம் தனிமைப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த தரப்பினருக்கு கனடாவில் வலுக்கும் எதிர்ப்பு - சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த திட்டம். கனடாவில் கென்சவேர்ட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் சர்வதேச நீதிமன்றத்தில் மஹிந்த தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கட்சியின் தலைவர் பியர் பொலியர் தெரிவித்துள்ளார்.கனடாவின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில், ''கனடாவில் கென்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைத்தால் தமிழர்கள் இனப்படுகொலை தொடர்பில் என்ன நிலைப்பாட்டை எடுக்கவுள்ளீர்கள்'' என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசாங்க உறுப்பினர்களிற்கு எதிராக மக்னிட்ஸ்கி தடைகளை விதிப்பதே தற்போது என்னுடைய திட்டம், இதன் மூலம் சர்வதேச தடைகளை விதிப்பதன்  ஊடாக அவர்களது தனிப்பட்ட நிதிகளை முடக்க முடியும்.இதேவேளை சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக நாங்கள் கனடாவின் வெளிவிவகார அமைச்சின் சட்டத்தரணிகளை பயன்படுத்துவோம்.இதன் மூலம் இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்காக இலங்கை அரசாங்கத்தின் உறுப்பினர்களை இனங்கண்டு சட்டநடவடிக்கைகளிற்கு உட்படுத்தலாம்.அத்துடன் தமிழர்களிற்கு எதிராக தொடரும் இனப்படுகொலை நடவடிக்கைகளிற்காக இலங்கை அரசாங்கத்தை தொடர்ந்து கண்டிப்போம் தனிமைப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement