எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு பொதுஜன பெரமுன தயாராக இருந்தால் அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ,
தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் இப்போது எங்களிடம் உள்ளது.
நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்பது நல்ல செய்தி. தேர்தலில் வேட்பாளரை களமிறக்கும் போது அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது புரியும்.
நாங்கள் எப்போதும் ஒரு பொது வேட்பாளரையே முன்வைத்தோம். அடுத்து நமது அரசு வரும்.
அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து பயணிக்க தயாராக இருந்தால், நாங்கள் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மஹிந்தவின் நிலைப்பாடு. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு பொதுஜன பெரமுன தயாராக இருந்தால் அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ,தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் இப்போது எங்களிடம் உள்ளது. நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்பது நல்ல செய்தி. தேர்தலில் வேட்பாளரை களமிறக்கும் போது அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பது புரியும். நாங்கள் எப்போதும் ஒரு பொது வேட்பாளரையே முன்வைத்தோம். அடுத்து நமது அரசு வரும். அதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் இணைந்து பயணிக்க தயாராக இருந்தால், நாங்கள் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.