• Feb 07 2025

இரண்டு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி - வெளியான அறிவிப்பு

Chithra / Feb 7th 2025, 1:16 pm
image

 

புத்தளம் ரயில் மார்க்கத்தில் 55ஆம் கட்டையில் உள்ள ரயில் கடவையில்  திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக குருணாகல் - புத்தளம் வீதியில் ரயில் கடவை  ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் இன்று  அறிவித்துள்ளது.

ரயில்வே திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதால் நாளை சனிக்கிழமை (08) மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (09) குருணாகல் - புத்தளம் வீதியில்  ரயில் கடவை  ஊடான பகுதி மீண்டும் மூடப்படும்.

நேற்றைய தினமும்  திருத்தப்பணிகளினால் இந்த வீதி மூடப்பட்டது.

இந்த நடவடிக்கையால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அசௌகரியத்தை குறைத்து கொள்வதற்கும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்கு மூடப்படும் முக்கிய வீதி - வெளியான அறிவிப்பு  புத்தளம் ரயில் மார்க்கத்தில் 55ஆம் கட்டையில் உள்ள ரயில் கடவையில்  திருத்தப்பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக குருணாகல் - புத்தளம் வீதியில் ரயில் கடவை  ஊடான பகுதி இரண்டு நாட்களுக்கு மூடப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் இன்று  அறிவித்துள்ளது.ரயில்வே திணைக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,திருத்தப்பணிகள் நடைபெற்று வருவதால் நாளை சனிக்கிழமை (08) மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (09) குருணாகல் - புத்தளம் வீதியில்  ரயில் கடவை  ஊடான பகுதி மீண்டும் மூடப்படும்.நேற்றைய தினமும்  திருத்தப்பணிகளினால் இந்த வீதி மூடப்பட்டது.இந்த நடவடிக்கையால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், அசௌகரியத்தை குறைத்து கொள்வதற்கும் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement