• Sep 29 2024

சாதாரண தரப் பரீட்சை நுழைவுப் பத்திரங்களில் பாரிய குளறுபடிகள்!

Chithra / May 3rd 2024, 9:32 am
image

Advertisement

 

கல்வியாண்டு 2023 இற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கான நுழைவுப் பத்திரங்களில் பாரிய குளறுபடிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்யாத பாடங்களை குறிப்பிட்டு நுழைவுபத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அநேகமான நுழைவுப் பத்திரங்களில் பரீட்சார்த்தியின் மொழிமூலம் மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

பரீட்சை நுழைவுப்பத்திரங்கள் கணனி மயப்படுத்தப்படும் போது ஏற்பட்ட தவறு காரணாமாக இவ்வாறு பரீட்சை நுழைவுப் பத்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் தடவையாக தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளது நுழைவுப் பத்திரங்களிலும் பல குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கணித பாட பரீட்சைக்கு மட்டும் தோற்றும் பரீட்சார்த்திகளின் நுழைவுப் பத்திரத்தில் விஞ்ஞான பாடமும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்முறை 452979 பேர் பரீட்சைக்குத் தோற்ற உள்ளதாகவும் இதில் 65331 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனவும்3527 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 6ம் திகதி பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாதாரண தரப் பரீட்சை நுழைவுப் பத்திரங்களில் பாரிய குளறுபடிகள்  கல்வியாண்டு 2023 இற்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணப் தரப் பரீட்சைக்கான நுழைவுப் பத்திரங்களில் பாரிய குளறுபடிகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சார்த்திகளுக்கு அவர்கள் விண்ணப்பம் செய்யாத பாடங்களை குறிப்பிட்டு நுழைவுபத்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அநேகமான நுழைவுப் பத்திரங்களில் பரீட்சார்த்தியின் மொழிமூலம் மாற்றம் செய்யப்பட்டு அச்சிடப்பட்டுள்ளதாக அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.பரீட்சை நுழைவுப்பத்திரங்கள் கணனி மயப்படுத்தப்படும் போது ஏற்பட்ட தவறு காரணாமாக இவ்வாறு பரீட்சை நுழைவுப் பத்திரங்களில் பல்வேறு குளறுபடிகள் பதிவாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.இரண்டாம் தடவையாக தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளது நுழைவுப் பத்திரங்களிலும் பல குறைபாடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கணித பாட பரீட்சைக்கு மட்டும் தோற்றும் பரீட்சார்த்திகளின் நுழைவுப் பத்திரத்தில் விஞ்ஞான பாடமும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இம்முறை 452979 பேர் பரீட்சைக்குத் தோற்ற உள்ளதாகவும் இதில் 65331 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் எனவும்3527 பரீட்சை நிலையங்களில் எதிர்வரும் 6ம் திகதி பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement