மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர், எதிர்வரும் ஜூன் 03 முதல் 06 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்விஜயத்தின் போது மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கான விஜயத்தின் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜமீரின், இவ்விஜயத்தின்போது மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மூசா ஜமீர், எதிர்வரும் ஜூன் 03 முதல் 06 வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.இவ்விஜயத்தின் போது மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக்குழுவினர் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிற்கான விஜயத்தின் போது வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலிசப்ரியுடன் உத்தியோகபூர்வ இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெளிவிவகார அமைச்சர் ஜமீரின், இவ்விஜயத்தின்போது மாலைதீவு வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.