• Nov 28 2024

செயலிழந்த ஸ்கேன் இயந்திரங்கள் - கொழும்பில் நீண்டுள்ள நோயாளர்களின் பட்டியல்

Chithra / Aug 9th 2024, 8:18 am
image

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரு CT ஸ்கேன் இயந்திரங்களும், இரு MRI ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

இயந்திர செயலிழப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளர்களும் வைத்தியசாலை சேவை ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.

தற்போது வைத்தியசாலையில் உள்ள இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை பயன்படுத்தி 24 மணிநேரமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எனினும் பரிசோதனைக்காக காத்திருக்கும் நோயாளர்களின் பட்டியல் நீண்டுள்ளது. இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

பழுதடைந்துள்ள இயந்திரங்களை காலதாமதமின்றி மீள் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இச்செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.

செயலிழந்த ஸ்கேன் இயந்திரங்கள் - கொழும்பில் நீண்டுள்ள நோயாளர்களின் பட்டியல்  கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரு CT ஸ்கேன் இயந்திரங்களும், இரு MRI ஸ்கேன் இயந்திரங்களும் செயலிழந்துள்ளதாக தேசிய கதிரியல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத் தலைவர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.இயந்திர செயலிழப்பு காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைப் பெற வரும் நோயாளர்களும் வைத்தியசாலை சேவை ஊழியர்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதாகவும் சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.தற்போது வைத்தியசாலையில் உள்ள இரு எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரங்களை பயன்படுத்தி 24 மணிநேரமும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.எனினும் பரிசோதனைக்காக காத்திருக்கும் நோயாளர்களின் பட்டியல் நீண்டுள்ளது. இயந்திரங்களை பழுதுபார்ப்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.பழுதடைந்துள்ள இயந்திரங்களை காலதாமதமின்றி மீள் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இச்செயற்பாட்டை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்று சானக்க தர்மவிக்ரம மேலும் குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement