• Sep 20 2024

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் மந்தபோசணை - 414 சிறுவர்கள் அடையாளம்! samugammedia

Chithra / Aug 24th 2023, 1:40 pm
image

Advertisement

கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் 414 சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கெபிதிகொல்லேவ சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் அறிவித்துள்ளது. 

1-5 வயது வரையில் 173 சிறுவர்களும், 241 பாடசாலை மாணவர்களுமே இவ்வாறு மந்தபோசணையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த காரியாலயம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வாஹல்கட, ஹல்மில்லேவ மற்றும் கஹடகஸ்திஹிலிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மந்தபோசணை நிலைமை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறு மந்தபோசணையில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் அநேகமானவர்கள் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் மந்தபோசணை - 414 சிறுவர்கள் அடையாளம் samugammedia கெபிதிகொல்லேவ பிரதேசத்தில் 414 சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கெபிதிகொல்லேவ சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயம் அறிவித்துள்ளது. 1-5 வயது வரையில் 173 சிறுவர்களும், 241 பாடசாலை மாணவர்களுமே இவ்வாறு மந்தபோசணையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த காரியாலயம் வெளியிட்டுள்ள தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாஹல்கட, ஹல்மில்லேவ மற்றும் கஹடகஸ்திஹிலிய ஆகிய கிராம சேவகர் பிரிவுகளிலேயே மந்தபோசணை நிலைமை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மந்தபோசணையில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களில் அநேகமானவர்கள் விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement