• Mar 25 2025

கிளிநொச்சியில் அனுமதியின்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது!

Chithra / Mar 23rd 2025, 1:35 pm
image

 

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதியின்றி  மணல் விற்பனை நிலையம் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், கல்லாறு பகுதியில் பொது இடத்தில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த மணலும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதன்போது 28 கியூப் மணல் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், 

அதே பகுதியிலிருந்து அனுமதிப் பத்திரம் இன்றி மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அதன் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடையப் பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.


கிளிநொச்சியில் அனுமதியின்றி மணல் வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது  கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர் மற்றும் கல்லாறு பகுதிகளில் அனுமதியின்றி  மணல் விற்பனை நிலையம் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது  செய்யப்பட்டுள்ளார்.அத்துடன், கல்லாறு பகுதியில் பொது இடத்தில் மணல் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் இருந்த மணலும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது 28 கியூப் மணல் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதே பகுதியிலிருந்து அனுமதிப் பத்திரம் இன்றி மணலை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்றும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.அத்துடன் அதன் சாரதியும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் தடையப் பொருட்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement