• Oct 19 2024

வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்தவர் அதிரடியாக கைது! samugammedia

Tamil nila / May 13th 2023, 4:46 pm
image

Advertisement

வவுனியாவில் சீனிப்பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் இன்று (13.05.2023) காலை சுற்றிவளைத்துடன் அவரிடமிருந்து 263 போத்தல் சீனிப்பாணியினையும் கைப்பற்றியுள்ளனர்.




தேன் என சீனிப்பாணியினை விற்பனை செய்கின்றமை தொடர்பில் வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்களான தா.வாகீசன் , த.சிவரஞ்சன் , அ.விதுசன் , ஞா.ஞானப்பிரதாப் , ர.கிஷோஷான் ஆகியோர் வேப்பங்குளம் 8ம் ஒழுங்கை ஊர்மிளாகோட்டம் பகுதியிலுள்ள குறித்த வீட்டினை சுற்றிவளைத்தனர்.



இதன் போது குறித்த வீட்டில் விற்பனைக்கு தயாரான முறையில் காணப்பட்ட 263 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணியினை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியதுடன் சீனிப்பாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.



சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 263 போத்தல்களில் (750மில்லிலீற்றர் போத்தல்) அடைக்கப்பட்ட சீனிப்பாணி பொருட்கள் என்பன வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபடுத்தப்பட்ட சமயத்தில் சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.



வவுனியாவில் சீனிப்பாணியை காய்ச்சி தேன் என விற்பனை செய்தவர் அதிரடியாக கைது samugammedia வவுனியாவில் சீனிப்பாணியினை காய்ச்சி தேன் என விற்பனை செய்த நபரை சுகாதார பிரிவினர் இன்று (13.05.2023) காலை சுற்றிவளைத்துடன் அவரிடமிருந்து 263 போத்தல் சீனிப்பாணியினையும் கைப்பற்றியுள்ளனர்.தேன் என சீனிப்பாணியினை விற்பனை செய்கின்றமை தொடர்பில் வவுனியா சுகாதார பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொது சுகாதார பரிசோதகர்களான தா.வாகீசன் , த.சிவரஞ்சன் , அ.விதுசன் , ஞா.ஞானப்பிரதாப் , ர.கிஷோஷான் ஆகியோர் வேப்பங்குளம் 8ம் ஒழுங்கை ஊர்மிளாகோட்டம் பகுதியிலுள்ள குறித்த வீட்டினை சுற்றிவளைத்தனர்.இதன் போது குறித்த வீட்டில் விற்பனைக்கு தயாரான முறையில் காணப்பட்ட 263 போத்தல்களில் அடைக்கப்பட்ட சீனிப்பாணியினை சுகாதாரப் பிரிவினர் கைப்பற்றியதுடன் சீனிப்பாணி தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் கைப்பற்றினர்.சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட 263 போத்தல்களில் (750மில்லிலீற்றர் போத்தல்) அடைக்கப்பட்ட சீனிப்பாணி பொருட்கள் என்பன வவுனியா மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபடுத்தப்பட்ட சமயத்தில் சந்தேகநபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement