• Sep 23 2024

இலங்கையில் 21 இந்து ஆலயங்களுக்கு சென்றவர் கைது..! வெளியான அதிர்ச்சிக் காரணம் samugammedia

Chithra / Oct 23rd 2023, 6:10 pm
image

Advertisement

 


மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்குச் சொந்தமான 21 இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து  கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரால்,  கொள்ளையடித்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

நுவரெலியா பொலிஸாரால் நேற்று (22) கைது செய்யப்பட்ட சந்தேநபர்,  நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். 

அவரை நவம்பர் 3ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு  நுவரெலியா நீதவான் குஷிகா குமாரசிறி உத்தரவிட்டார்.

நுவரெலியா அம்பேவெல வத்த பொரகாஸ் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி ரகுநாதன் (வயது 43) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இருவரும்  கைது செய்யப்பட்டு சந்தேக நபருடன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

பிரதான சந்தேகநபரிடமிருந்து தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த இருவரையும் தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் நவம்பர் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.


பிரதான சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை, ராகலை, ஹைஃபோரஸ்ட், லிதுல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடப்புஸ்ஸல்லாவ, வெலிமடை, கெப்பட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட 21 இந்து ஆலயங்களில் சந்தேக நபர் புகுந்து கொள்ளையடித்துள்ளார். 

இலங்கையில் 21 இந்து ஆலயங்களுக்கு சென்றவர் கைது. வெளியான அதிர்ச்சிக் காரணம் samugammedia  மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்குச் சொந்தமான 21 இந்து ஆலயங்களுக்குள் நுழைந்து  கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரால்,  கொள்ளையடித்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.நுவரெலியா பொலிஸாரால் நேற்று (22) கைது செய்யப்பட்ட சந்தேநபர்,  நுவரெலியா நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 3ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு  நுவரெலியா நீதவான் குஷிகா குமாரசிறி உத்தரவிட்டார்.நுவரெலியா அம்பேவெல வத்த பொரகாஸ் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி ரகுநாதன் (வயது 43) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.திருடப்பட்ட தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த இருவரும்  கைது செய்யப்பட்டு சந்தேக நபருடன் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.பிரதான சந்தேகநபரிடமிருந்து தங்கப் பொருட்களை கொள்வனவு செய்த இருவரையும் தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபர்கள் இருவரையும் நவம்பர் 3ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.பிரதான சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.தலவாக்கலை, ராகலை, ஹைஃபோரஸ்ட், லிதுல, ஹட்டன், பொகவந்தலாவ, நானுஓயா, உடப்புஸ்ஸல்லாவ, வெலிமடை, கெப்பட்டிபொல, மாத்தளை, கம்பளை, நாவலப்பிட்டி ஆகிய பொலிஸ் எல்லைக்குட்பட்ட 21 இந்து ஆலயங்களில் சந்தேக நபர் புகுந்து கொள்ளையடித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement