• May 04 2024

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!- அச்சிட்டவரும் சிக்கினார் samugammedia

Chithra / Apr 12th 2023, 3:19 pm
image

Advertisement

ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரும், அதனை அச்சிட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை - கட்டுவன காவல்துறையினர் தெரிவித்தனர்.

கட்டுவன காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கட்டுவன - பிந்தனையில் அமைந்துள்ள சூதாட்ட நிலையம் ஒன்று நேற்று (11) காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 17 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை காவல்துறையினர் மீட்டனர்.

குறித்த சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைக்கமைய, கட்டுவன நகரில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அதன்போது, போலி நாணய தாள்களை அச்சடித்ததாக கருதப்படும் இயந்திரம் மற்றும் கணினி ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 38 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை இன்று (12) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, போலி நாணயத்தாள்களும் புழக்கத்தில் விடப்படுகின்றன. எனவே, அதுகுறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டுமென காவல்துறை கோரியுள்ளது.

அதேநேரம், திட்டமிட்டவாறு திருட்டுச் சம்பவங்களின் ஈடுபடும் குழுவினரின் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பெறுமதியான ஆபரணங்களை அணிந்துசெல்ல வேண்டாம் என்பதுடன் பணப்பையை கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது- அச்சிட்டவரும் சிக்கினார் samugammedia ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒருவரும், அதனை அச்சிட்ட நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை - கட்டுவன காவல்துறையினர் தெரிவித்தனர்.கட்டுவன காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கட்டுவன - பிந்தனையில் அமைந்துள்ள சூதாட்ட நிலையம் ஒன்று நேற்று (11) காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன், போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டார்.அவரிடமிருந்து 17 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை காவல்துறையினர் மீட்டனர்.குறித்த சந்தேகநபரிடம் நடத்திய விசாரணைக்கமைய, கட்டுவன நகரில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட நபர் ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.அதன்போது, போலி நாணய தாள்களை அச்சடித்ததாக கருதப்படும் இயந்திரம் மற்றும் கணினி ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37 மற்றும் 38 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.சந்தேக நபர்களை இன்று (12) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதேவேளை, போலி நாணயத்தாள்களும் புழக்கத்தில் விடப்படுகின்றன. எனவே, அதுகுறித்து அதிக அவதானத்துடன் இருக்க வேண்டுமென காவல்துறை கோரியுள்ளது.அதேநேரம், திட்டமிட்டவாறு திருட்டுச் சம்பவங்களின் ஈடுபடும் குழுவினரின் நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் பெறுமதியான ஆபரணங்களை அணிந்துசெல்ல வேண்டாம் என்பதுடன் பணப்பையை கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement