• Sep 20 2024

பிரித்தானியாவில், யாழ்ப்பாண தமிழரின் கடையில் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய நபர்!

Tamil nila / Dec 23rd 2022, 10:06 pm
image

Advertisement

பிரித்தானியாவில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடத்தி வரும் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து கொள்ளையடித்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Hornsby வீதியில் உள்ள கடையின் அலமாரிகளில் இருந்து 50 பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களை ஒரு கூடைக்குள் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் வெளியேறும் பாதையை நோக்கி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் நடந்து செல்வதனை கடையில் பணியாற்றிய Mathan Sabba என்பவர் அவதானித்து அவருடன் மோதலில் ஈடுபட்டு பொருட்களை மீட்டு எடுத்தார்.


இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையி்ல் அவர் மீது தாக்குதல் மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.


இந்த திருட்டு சம்பவம் அங்காடியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது.


நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட குறித்த நபர் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி அன்று பொருட்கள் திருடப்பட்டதையும், கடையில் ஒரு ஊழியரை அடித்துத் தாக்கியதற்காகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.


டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, குறித்த நபருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 50 பவுண்ட் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பிரித்தானியாவில், யாழ்ப்பாண தமிழரின் கடையில் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய நபர் பிரித்தானியாவில், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் நடத்தி வரும் பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து கொள்ளையடித்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.Hornsby வீதியில் உள்ள கடையின் அலமாரிகளில் இருந்து 50 பவுண்டுகள் மதிப்புள்ள பொருட்களை ஒரு கூடைக்குள் நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் வெளியேறும் பாதையை நோக்கி கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் நடந்து செல்வதனை கடையில் பணியாற்றிய Mathan Sabba என்பவர் அவதானித்து அவருடன் மோதலில் ஈடுபட்டு பொருட்களை மீட்டு எடுத்தார்.இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையி்ல் அவர் மீது தாக்குதல் மற்றும் திருட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.இந்த திருட்டு சம்பவம் அங்காடியில் இருந்த சிசிடிவியில் பதிவாகி சமூக வலைதளங்களில் பதிவாகியுள்ளது.நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்ட குறித்த நபர் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி அன்று பொருட்கள் திருடப்பட்டதையும், கடையில் ஒரு ஊழியரை அடித்துத் தாக்கியதற்காகவும் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி அன்று நீதிமன்றத்தில் நடந்த விசாரணையைத் தொடர்ந்து, குறித்த நபருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன் 50 பவுண்ட் இழப்பீடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement