• Nov 26 2024

யாழில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

Tamil nila / Sep 9th 2024, 10:49 pm
image

யாழில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இதன் போது ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்த செல்வராசா கார்த்தீபன் (வயது 35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், 

குறித்த நபர் இன்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் தோட்டத்திற்கு சென்று தோட்டவேலையை செய்து விட்டு 9:30 மணி அளவில் வீட்டுக்கு வந்து குளிப்பதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் குளிப்பதற்கு சென்ற கணவன் நீண்ட நேரமாக திரும்பி வராத காரணத்தினால் மனைவி கிணற்றடிக்கு சென்று பார்வையிட்ட வேளை கணவன் நிலத்தில் விழுந்த நிலையில் அசைவற்று காணப்பட்டார்.

அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதர வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூட்டு பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்றவர் சடலமாக மீட்பு யாழில் வீட்டு கிணற்றடியில் குளிக்க சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன் போது ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியை சேர்ந்த செல்வராசா கார்த்தீபன் (வயது 35) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், குறித்த நபர் இன்று அதிகாலை ஐந்து முப்பது மணி அளவில் தோட்டத்திற்கு சென்று தோட்டவேலையை செய்து விட்டு 9:30 மணி அளவில் வீட்டுக்கு வந்து குளிப்பதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார்.இந்நிலையில் குளிப்பதற்கு சென்ற கணவன் நீண்ட நேரமாக திரும்பி வராத காரணத்தினால் மனைவி கிணற்றடிக்கு சென்று பார்வையிட்ட வேளை கணவன் நிலத்தில் விழுந்த நிலையில் அசைவற்று காணப்பட்டார்.அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதர வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.உடற்கூட்டு பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்பாணம் போதனா  வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement