• Feb 13 2025

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் மரணம்! நான்கு பொலிஸார் இடைநிறுத்தம்

Chithra / Feb 13th 2025, 2:29 pm
image

 

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் வாத்துவை பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்கள் தற்காலிக பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.

பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

நேற்று முன்தினம் இரவு அது தொடர்பில் வாத்துவை பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிசார் நேற்று (12) மாலை கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் பாணந்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் மரணம் நான்கு பொலிஸார் இடைநிறுத்தம்  பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் வாத்துவை பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்கள் தற்காலிக பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் வாத்துவை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.நேற்று முன்தினம் இரவு அது தொடர்பில் வாத்துவை பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிசார் நேற்று (12) மாலை கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.அவர்களை இன்றைய தினம் பாணந்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement