• Nov 26 2024

நன்றி மறந்து பச்சோந்தி தனமாக செயற்படும் ஹிஸ்புல்லா -மங்கள சேனரத் குற்றச்சாட்டு..!

Sharmi / Sep 17th 2024, 3:11 pm
image

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு தற்போது காலை வாரிவிட்டதாக முன்னாள் வாழைச்சேனை காகித ஆலை தவிசாளர் மங்கள சேனரத் தெரிவித்துள்ளார்.

கறுவாக்கேணி வாழைச்சேனையில் அமைந்துள்ள சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறுபட்ட அரசியல் சர்ச்சையில் மாட்டிக் கொண்டு மாணவர்களின் கற்றலுக்கு பயன்படாது நீண்ட காலமாக மூடிக் கிடந்த புணானை எஸ்.எல்.ரி கம்பஸினை எமது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவே அவரது நிலைமை அறிந்து மற்றும் மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சி கருதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து அதன் நிர்வாகத்திடம் அண்மையில் கையளித்தார்.

அதற்கு நன்றி கடனாக தான் ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருப்பதாகவும் எதிர்கால தேர்தல் நடவடிக்கையின் போது ஜனாதிபதிக்கு நன்றி விசுவாசத்துடன் செயல்படப் போவதாகவும்  அப்போது தெரிவித்திருந்தார்.

ஆனால், தற்போது அந்நிலை மறந்து சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வருகின்றார். இது அவரது நன்றி மறந்த செயலாகவே நான் கருதுகிறேன்.

ஏனென்றால் இப் பல்கலைக் கழகத்தை திறப்பதற்கு  உள்ள தடைகள் தொடர்பாக முன் நின்று செயல்பட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தி செயல்பட்டவர்களில் நானும் ஒருவனாகும் அதனாலேயே நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து விடயங்களும் நன்கு எனக்கு தெரியும் என்றார்.

இவ்வாறான  அரசியல் சூழ் நிலையில் அவர் அமைதி காத்திருக்கவேண்டும்.சஜித் பிரேமதாசவோ ரவூப் ஹக்கீமோ அவருக்கு இது தொடர்பாக எதுவித உதவியும் செய்யவில்லை.

நான் அவருடன் கூட இருந்து இவ் உதவியை ஜனாதிபதி மூலமாக செய்து கொடுத்தேன்.

ஆகவே தான் இவ் விடயத்தை பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறேன் என்றார்.

2005 இல் இருந்து எனக்கும் அவருக்கும் அரசியல் தொடர்ப்பு உள்ளது,அதன் மூலமாகவே  அவரை எனக்கு நன்கு தெரியும்.குறித்த விடயம் தொடர்பாக என்னுடன் பேசினார்.தான் பல்வேறு பட்ட அமைச்சுப் பதவிகள் மற்றும் ஆளுநராக இருந்தும் என்னால் இவ் பல்கலைக் கழகத்தை நடாத்த முடியாத இக்கட்டான சூழ் நிலையில் இருக்கிறேன் என கவலையுடன் அப்போது என்னிடம்  கூறினார்.

இதனை நிறைவேற்றிக் கொடுத்ததன் பின்னர் நன்றி மறந்து விட்டார்.ஜனாதிபதி அவருடன் பேசுவதற்கு தொடர்பு கொண்ட போதிலும் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இது ஒரு நல்ல செயலாக அவர் கருதுகிறாரா என கேள்வி எழுப்பினார்.

ஜனாதிபதி அவரது கையால் பல்கலைக் கழகத்தை திறந்து வைக்கவேண்டும் என்று கூறி அவராலேயே அதன்  நிகழ்சி நிரல் தயாரிக்கப்பட்டது.

பல்கலைக் கழகம் திறக்கப்படும் வரை அவர் எம்முடன் இருந்தார்.முன்பெல்லாம் அடிக்கடி தொலை பேசி அழைப்பு எடுப்பார்.அன்பாக சுகம் விசாரிப்பார்.பின்னர் அவரது தொடர்பு படிப்படியாக குறைந்தது.

நெருக்கத்தை விலக்கிக் கொண்டு தோற்றத்தையும் மாற்றிக் பச்சோந்தி  தனமாக செயல்படுகிறார்.இவர் இவ்வாறு நடந்து கொண்ட விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் கவலையுடன் மேலும் தெரிவித்தார்.

நன்றி மறந்து பச்சோந்தி தனமாக செயற்படும் ஹிஸ்புல்லா -மங்கள சேனரத் குற்றச்சாட்டு. முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிவிட்டு தற்போது காலை வாரிவிட்டதாக முன்னாள் வாழைச்சேனை காகித ஆலை தவிசாளர் மங்கள சேனரத் தெரிவித்துள்ளார்.கறுவாக்கேணி வாழைச்சேனையில் அமைந்துள்ள சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பல்வேறுபட்ட அரசியல் சர்ச்சையில் மாட்டிக் கொண்டு மாணவர்களின் கற்றலுக்கு பயன்படாது நீண்ட காலமாக மூடிக் கிடந்த புணானை எஸ்.எல்.ரி கம்பஸினை எமது நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவே அவரது நிலைமை அறிந்து மற்றும் மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சி கருதி சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்து அதன் நிர்வாகத்திடம் அண்மையில் கையளித்தார்.அதற்கு நன்றி கடனாக தான் ஜனாதிபதிக்கு விசுவாசமாக இருப்பதாகவும் எதிர்கால தேர்தல் நடவடிக்கையின் போது ஜனாதிபதிக்கு நன்றி விசுவாசத்துடன் செயல்படப் போவதாகவும்  அப்போது தெரிவித்திருந்தார்.ஆனால், தற்போது அந்நிலை மறந்து சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வருகின்றார். இது அவரது நன்றி மறந்த செயலாகவே நான் கருதுகிறேன்.ஏனென்றால் இப் பல்கலைக் கழகத்தை திறப்பதற்கு  உள்ள தடைகள் தொடர்பாக முன் நின்று செயல்பட்டு ஜனாதிபதியின் கவனத்திற்கு தெரியப்படுத்தி செயல்பட்டவர்களில் நானும் ஒருவனாகும் அதனாலேயே நடந்த சம்பவம் தொடர்பாக அனைத்து விடயங்களும் நன்கு எனக்கு தெரியும் என்றார்.இவ்வாறான  அரசியல் சூழ் நிலையில் அவர் அமைதி காத்திருக்கவேண்டும்.சஜித் பிரேமதாசவோ ரவூப் ஹக்கீமோ அவருக்கு இது தொடர்பாக எதுவித உதவியும் செய்யவில்லை.நான் அவருடன் கூட இருந்து இவ் உதவியை ஜனாதிபதி மூலமாக செய்து கொடுத்தேன்.ஆகவே தான் இவ் விடயத்தை பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கிறேன் என்றார்.2005 இல் இருந்து எனக்கும் அவருக்கும் அரசியல் தொடர்ப்பு உள்ளது,அதன் மூலமாகவே  அவரை எனக்கு நன்கு தெரியும்.குறித்த விடயம் தொடர்பாக என்னுடன் பேசினார்.தான் பல்வேறு பட்ட அமைச்சுப் பதவிகள் மற்றும் ஆளுநராக இருந்தும் என்னால் இவ் பல்கலைக் கழகத்தை நடாத்த முடியாத இக்கட்டான சூழ் நிலையில் இருக்கிறேன் என கவலையுடன் அப்போது என்னிடம்  கூறினார்.இதனை நிறைவேற்றிக் கொடுத்ததன் பின்னர் நன்றி மறந்து விட்டார்.ஜனாதிபதி அவருடன் பேசுவதற்கு தொடர்பு கொண்ட போதிலும் பேசுவதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.இது ஒரு நல்ல செயலாக அவர் கருதுகிறாரா என கேள்வி எழுப்பினார்.ஜனாதிபதி அவரது கையால் பல்கலைக் கழகத்தை திறந்து வைக்கவேண்டும் என்று கூறி அவராலேயே அதன்  நிகழ்சி நிரல் தயாரிக்கப்பட்டது.பல்கலைக் கழகம் திறக்கப்படும் வரை அவர் எம்முடன் இருந்தார்.முன்பெல்லாம் அடிக்கடி தொலை பேசி அழைப்பு எடுப்பார்.அன்பாக சுகம் விசாரிப்பார்.பின்னர் அவரது தொடர்பு படிப்படியாக குறைந்தது.நெருக்கத்தை விலக்கிக் கொண்டு தோற்றத்தையும் மாற்றிக் பச்சோந்தி  தனமாக செயல்படுகிறார்.இவர் இவ்வாறு நடந்து கொண்ட விடயத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என அவர் கவலையுடன் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement