• May 04 2024

நிரந்தர அதிபரை நியமிக்க கோரி போராட்டத்தில் குதித்த மாங்குளம் பாடசாலை மாணவர்கள்!

Sharmi / Jan 17th 2023, 8:48 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட  மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 2 அரை வருடங்களாக குறித்த பாடசாலைக்கு நிரந்தர அதிபர் இல்லாத நிலையில் நிரந்தர முதல்வரை நியமிக்க கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்"உடன் தீர்வு இல்லையெனில் போராட்டம் வலுப்பெறும் ", "எங்கே எங்கே எமது பாடசாலை அதிபர் எங்கே", "தரமுயர்ந்த பாடசாலை தரமான அதிபர் வேண்டும்", "துணுக்காய் கல்வி வலயம் அதிபர் இல்லாத 1AB பாடசாலையா ", "அருகில் வலயம் அனாதையாக பாடசாலை "  போன்ற சுலோகங்கங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை  சம்பவ இடத்திற்கு  வருகை  தந்த மாங்குளம் பொலிஸார் , மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இடம்பெற  ஒத்துழைக்குமாறும்  இதற்கான தீர்வு ஒன்றை தாம் பெற்றுக்கொள்ள ஆவண செய்வதாகவும் வழங்கிய  உறுதி மொழியினை அடுத்து  மாணவர்கள் கலைந்து சென்று  கற்றல் நடவடிக்கையினை தொடர்ந்தனர்.   

குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்,  பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.






நிரந்தர அதிபரை நியமிக்க கோரி போராட்டத்தில் குதித்த மாங்குளம் பாடசாலை மாணவர்கள் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட  மாங்குளம் மகாவித்தியாலய மாணவர்கள் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.கடந்த 2 அரை வருடங்களாக குறித்த பாடசாலைக்கு நிரந்தர அதிபர் இல்லாத நிலையில் நிரந்தர முதல்வரை நியமிக்க கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்"உடன் தீர்வு இல்லையெனில் போராட்டம் வலுப்பெறும் ", "எங்கே எங்கே எமது பாடசாலை அதிபர் எங்கே", "தரமுயர்ந்த பாடசாலை தரமான அதிபர் வேண்டும்", "துணுக்காய் கல்வி வலயம் அதிபர் இல்லாத 1AB பாடசாலையா ", "அருகில் வலயம் அனாதையாக பாடசாலை "  போன்ற சுலோகங்கங்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதேவேளை  சம்பவ இடத்திற்கு  வருகை  தந்த மாங்குளம் பொலிஸார் , மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை இடம்பெற  ஒத்துழைக்குமாறும்  இதற்கான தீர்வு ஒன்றை தாம் பெற்றுக்கொள்ள ஆவண செய்வதாகவும் வழங்கிய  உறுதி மொழியினை அடுத்து  மாணவர்கள் கலைந்து சென்று  கற்றல் நடவடிக்கையினை தொடர்ந்தனர்.   குறித்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள்,  பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement