கொழும்பில் உள்ள பாதுக்கை பகுதியில் போதைப் பொருள் வர்த்தகரான மன்னா ரொஷான் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பாதாள உலகக் குழு உறுப்பினர் தொன் ரொஷான் இந்திக்க எனப்படும் "மன்னா ரொஷான்" மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் கடந்த திங்கள் கிழமை (25) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனைக்காக இவர்கள் இருவரும் பாதுக்க துந்தான வெந்தேசிவத்தைக்கு சென்றுள்ளதாகவும், அங்கு சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள லலித் கன்னங்கரவிடம் இருந்து போதைப்பொருள் பெறுவதற்காகவே இவர்கள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் இருந்து இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான லலித் கன்னங்கரா என்பவரின் நேரடி தலையீட்டில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் மன்னா ரொஷானின் மனைவி அளித்த வாக்குமூலத்தில் மன்னா ரொஷான் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் லலித் கன்னங்கரா அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கடுமையாக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மன்னா ரொஷான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது நண்பர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பண உதவி கோரியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் லலித் கன்னங்கரா, போதைப் பொருள் வழங்குவதாக தெரிவித்தமைக்கு இணங்க, மன்னா ரொஷான் தமது உதவியாளருடன் துப்பாக்கி சூடு இடம்பெற்ற பகுதிக்கு சென்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த இதே வேளை மன்னா ரொஷான் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் பாதுக்கை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டனர்.
அத்துடன் டி-56 ரக துப்பாக்கி பிரயோகத்தால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மன்னா ரொஷான் கொலை தொடர்பில் மனைவி வாக்குமூலம்.samugammedia கொழும்பில் உள்ள பாதுக்கை பகுதியில் போதைப் பொருள் வர்த்தகரான மன்னா ரொஷான் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவரது மனைவி பொலிஸாரிடம் வாக்குமூலமளித்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பாதாள உலகக் குழு உறுப்பினர் தொன் ரொஷான் இந்திக்க எனப்படும் "மன்னா ரொஷான்" மற்றும் அவரது உதவியாளர் ஒருவரும் கடந்த திங்கள் கிழமை (25) சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.போதைப்பொருள் விற்பனைக்காக இவர்கள் இருவரும் பாதுக்க துந்தான வெந்தேசிவத்தைக்கு சென்றுள்ளதாகவும், அங்கு சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தற்போது டுபாயில் தலைமறைவாகியுள்ள லலித் கன்னங்கரவிடம் இருந்து போதைப்பொருள் பெறுவதற்காகவே இவர்கள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். டுபாயில் இருந்து இலங்கையில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுவின் தலைவரான லலித் கன்னங்கரா என்பவரின் நேரடி தலையீட்டில் இந்த துப்பாக்கி சூடு இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.குறித்த விடயம் தொடர்பில் மன்னா ரொஷானின் மனைவி அளித்த வாக்குமூலத்தில் மன்னா ரொஷான் கொலை செய்யப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் லலித் கன்னங்கரா அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.அதேநேரம் கடுமையாக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மன்னா ரொஷான் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமது நண்பர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பண உதவி கோரியுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்தநிலையில் லலித் கன்னங்கரா, போதைப் பொருள் வழங்குவதாக தெரிவித்தமைக்கு இணங்க, மன்னா ரொஷான் தமது உதவியாளருடன் துப்பாக்கி சூடு இடம்பெற்ற பகுதிக்கு சென்றதாக அவரது மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.குறித்த இதே வேளை மன்னா ரொஷான் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் பாதுக்கை பகுதியில் வைத்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டனர். அத்துடன் டி-56 ரக துப்பாக்கி பிரயோகத்தால் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.