• Jan 01 2025

மன்னார் ரோட்டரி கழகத்தின்- புதிய தலைவர் பதவியேற்பு

Tharmini / Dec 24th 2024, 10:24 am
image

மாவட்ட ரோட்டரி கழகத்தின் வருடாந்த ஆளுநர் விஜயமுத், மன்னார் ரோட்டரி கழகத்தின் ஆறாவது புதிய தலைவர் பதவியேற்பு நிகழ்வும் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (23) நடைபெற்றது.

மன்னார், ரோட்டரி கழகத்தின் தலைவர் திருமலைராசா தனேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ரோட்டரி கழகத்தின் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் சுஷேன ரணதுங்க, உதவி ஆளுநர்  ரொட்டேரியன் தேவரூபன் மற்றும் ரோட்டரி மாவட்ட செயலாளர் ரொட்டேரியன் காமினி மதநாயக்க கலந்து கொண்டார்கள்.

இதன் போது ரோட்டரி கழகத்தின் சம்பிரதாய முறைப்படி கடந்த ஆண்டு மன்னார் ரோட்டரி கழகத் தலைவர் பொறியியலாளர் ரொபேட் பீரிஸ் அவர்களிடமிருந்து பொருப்புகள் யாவும் மன்னார் ரோட்டரி கழகத்தின் புதிய தலைவர் திருமலைராசா தனேஸ் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது

மேலும், ரோட்டரி கழக மாவட்ட ஆளுநரால் மேலதிக ரோட்டரி கழக செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன் மன்னார் ரோட்டரி கழகத்தின் கடந்த ஆண்டு செயற்பாடுகள் தொடர்பாகவும் பரிசோதிக்கப்பட்டது

அதற்கமைய மன்னார் ரோட்டரி கழகத்தின் செயலாளர் வைத்தியர் ரொட்டேரியன் பிரியதர்ஷன் அவர்களால் சமூக சேவை வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும்  வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது கழகத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வரவேற்கும் நிகழ்வும் நடைபெற்றது

விஷேடமாக ரோட்டிரக்கட் இன்டிரக்ட் உறுப்பினர்களுடன் ரோட்டரி ஆளுநர் மற்றும் செயலாளர்கள் கலந்துரையாடியதுடன்  சுயதொழில் மற்றும் கிளினிங் சென்டருக்கான உதவிப் பொருட்களும் வழங்கி வைக்ககப்பட்டது

சிறப்பு நிகழ்வாக மன்னார் ரோட்டரி கழக உறுப்பினர் ரேமன் அவர்களின் புதல்லியான மாணவி டியாராவின் நடனமும் இடம்பெற்றது. 





மன்னார் ரோட்டரி கழகத்தின்- புதிய தலைவர் பதவியேற்பு மாவட்ட ரோட்டரி கழகத்தின் வருடாந்த ஆளுநர் விஜயமுத், மன்னார் ரோட்டரி கழகத்தின் ஆறாவது புதிய தலைவர் பதவியேற்பு நிகழ்வும் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (23) நடைபெற்றது.மன்னார், ரோட்டரி கழகத்தின் தலைவர் திருமலைராசா தனேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ரோட்டரி கழகத்தின் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் சுஷேன ரணதுங்க, உதவி ஆளுநர்  ரொட்டேரியன் தேவரூபன் மற்றும் ரோட்டரி மாவட்ட செயலாளர் ரொட்டேரியன் காமினி மதநாயக்க கலந்து கொண்டார்கள்.இதன் போது ரோட்டரி கழகத்தின் சம்பிரதாய முறைப்படி கடந்த ஆண்டு மன்னார் ரோட்டரி கழகத் தலைவர் பொறியியலாளர் ரொபேட் பீரிஸ் அவர்களிடமிருந்து பொருப்புகள் யாவும் மன்னார் ரோட்டரி கழகத்தின் புதிய தலைவர் திருமலைராசா தனேஸ் அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டதுமேலும், ரோட்டரி கழக மாவட்ட ஆளுநரால் மேலதிக ரோட்டரி கழக செயற்பாடுகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டதுடன் மன்னார் ரோட்டரி கழகத்தின் கடந்த ஆண்டு செயற்பாடுகள் தொடர்பாகவும் பரிசோதிக்கப்பட்டதுஅதற்கமைய மன்னார் ரோட்டரி கழகத்தின் செயலாளர் வைத்தியர் ரொட்டேரியன் பிரியதர்ஷன் அவர்களால் சமூக சேவை வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும்  வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது கழகத்தில் இணைந்த புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி வரவேற்கும் நிகழ்வும் நடைபெற்றதுவிஷேடமாக ரோட்டிரக்கட் இன்டிரக்ட் உறுப்பினர்களுடன் ரோட்டரி ஆளுநர் மற்றும் செயலாளர்கள் கலந்துரையாடியதுடன்  சுயதொழில் மற்றும் கிளினிங் சென்டருக்கான உதவிப் பொருட்களும் வழங்கி வைக்ககப்பட்டதுசிறப்பு நிகழ்வாக மன்னார் ரோட்டரி கழக உறுப்பினர் ரேமன் அவர்களின் புதல்லியான மாணவி டியாராவின் நடனமும் இடம்பெற்றது. 

Advertisement

Advertisement

Advertisement