• Nov 28 2024

வெளிநாடுகளில் விடுமுறையை கழிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள்..! வெளியான தகவல்

Chithra / Dec 27th 2023, 9:04 am
image

 

புத்தாண்டு விடுமுறையைக் கழிப்பதற்காக இருபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில் பலர் உறவினர்களை சந்திக்கவும், பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை கவனிக்கவும் வெளிநாடுகளில் உள்ளனர்.

வெளிநாடு சென்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே அண்மைய நாட்களில் நாடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, நுவரெலியாவிலுள்ள ஜெனரல் ஹவுஸ் பாராளுமன்ற உறுப்பினர் பங்களாவின் அறைகள் இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கத்தவர்கள் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட நூறு எம்.பி.க்கள் அந்த பங்களாவை முன்பதிவு செய்துள்ளதாகவும் பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு கடந்த 13ஆம் திகதி நடைபெற்றதையடுத்து, சபாநாயகர் நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். 

இதனால் எம்.பி.க்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் விடுமுறையை கழிக்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள். வெளியான தகவல்  புத்தாண்டு விடுமுறையைக் கழிப்பதற்காக இருபதுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்களில் பலர் உறவினர்களை சந்திக்கவும், பிள்ளைகளின் கல்விச் செயற்பாடுகளை கவனிக்கவும் வெளிநாடுகளில் உள்ளனர்.வெளிநாடு சென்ற பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஏற்கனவே அண்மைய நாட்களில் நாடு திரும்பியுள்ளனர்.இதேவேளை, நுவரெலியாவிலுள்ள ஜெனரல் ஹவுஸ் பாராளுமன்ற உறுப்பினர் பங்களாவின் அறைகள் இம்மாதம் 14ஆம் திகதி முதல் ஜனவரி முதலாம் திகதி வரை நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கத்தவர்கள் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.இந்த காலப்பகுதிக்குள் கிட்டத்தட்ட நூறு எம்.பி.க்கள் அந்த பங்களாவை முன்பதிவு செய்துள்ளதாகவும் பாராளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு கடந்த 13ஆம் திகதி நடைபெற்றதையடுத்து, சபாநாயகர் நாடாளுமன்றத்தை எதிர்வரும் ஜனவரி 9ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இதனால் எம்.பி.க்கள் அனைவருக்கும் கிட்டத்தட்ட ஒரு மாதம் விடுமுறை கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement