• Oct 23 2024

வெள்ளத்தில் மூழ்கிய களுத்துறையின் பல பகுதிகள்! தத்தளிக்கும் பரீட்சை நிலையம் samugammedia

Chithra / Jun 6th 2023, 12:43 pm
image

Advertisement

நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு புளத்சிங்கள கல்வி வலயத்துக்கு உட்பட்ட கூடலிகம மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளின் நலன் கருதி விசேட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாழும் மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அத்துடன், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு படகுச் சேவைகளும் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில்  ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித சேவை இலக்கமான 117 ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


வெள்ளத்தில் மூழ்கிய களுத்துறையின் பல பகுதிகள் தத்தளிக்கும் பரீட்சை நிலையம் samugammedia நாட்டில் சீரற்ற காலநிலையால் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள மற்றும் வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அத்தோடு புளத்சிங்கள கல்வி வலயத்துக்கு உட்பட்ட கூடலிகம மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சார்த்திகளின் நலன் கருதி விசேட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வாழும் மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.அத்துடன், கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு படகுச் சேவைகளும் நடத்தப்படுகின்றன.இந்நிலையில்  ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் பொதுமக்கள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் துரித சேவை இலக்கமான 117 ஐ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement