• Dec 14 2024

கனடாவில் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ் குடும்பஸ்தர்.!

Tamil nila / Oct 21st 2024, 8:54 pm
image

கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று அதிகாலை (20) இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோவில் வசித்து வந்த 44 வயதான பார்த்தீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதன் போது, மேற்படி நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்த போது குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ள நிலையில், இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


கனடாவில் வீட்டு வாசலில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட யாழ் குடும்பஸ்தர். கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளங்குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று அதிகாலை (20) இனம்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் சிக்கி யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோவில் வசித்து வந்த 44 வயதான பார்த்தீபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.இதன் போது, மேற்படி நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடியுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்து பார்த்த போது குடும்பஸ்தர் உயிரிழந்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ள நிலையில், இளம் குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement