• Oct 22 2024

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை!

Tamil nila / Oct 21st 2024, 9:55 pm
image

Advertisement

எதிர்வரும் பொதுத் தேர்தலினூடாக தமது தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கப்பெறுமானால், நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கத்திற்குச் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை மீளாய்வுக்குட்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இலங்கை தமது கடனை 2032ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் செலுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியம் வாய்ப்பளித்திருந்தது.

எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீள செலுத்த முடியும் என தெரிவித்து, உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது.

இதனால் எமக்குக் கிடைக்கப்பெற்ற சலுகைக் காலத்தில் 4 வருடங்கள் இல்லாமல் போயின.

எனினும், அந்த காலப்பகுதிக்குள் மீண்டும் கடனை செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிப்பதானால், நாட்டின் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான எந்தவொரு முயற்சியையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

எனவே தமது அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்தி, அதன் நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை எதிர்வரும் பொதுத் தேர்தலினூடாக தமது தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கப்பெறுமானால், நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.இடம்பெற்ற மக்கள் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், தற்போதைய அரசாங்கத்திற்குச் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையை மீளாய்வுக்குட்படுத்த முடியாமல் போயுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.இலங்கை தமது கடனை 2032ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் செலுத்த முடியும் என சர்வதேச நாணய நிதியம் வாய்ப்பளித்திருந்தது.எனினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனை மீள செலுத்த முடியும் என தெரிவித்து, உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தது.இதனால் எமக்குக் கிடைக்கப்பெற்ற சலுகைக் காலத்தில் 4 வருடங்கள் இல்லாமல் போயின.எனினும், அந்த காலப்பகுதிக்குள் மீண்டும் கடனை செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிப்பதானால், நாட்டின் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்.அதற்கான எந்தவொரு முயற்சியையும் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.எனவே தமது அரசாங்கத்தில் சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்தி, அதன் நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement